பிரித்தானிய மகாராணியின்இறுதிக் கிரியைகள் இன்று!

Read Time:2 Minute, 10 Second

பிரித்தானிய மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று (19)  இடம்பெறவுள்ளது.

லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில்ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மகாராணியின் கணவர் மன்னர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு அருகே இன்று 19ஆம் திகதி மகாராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

மகாராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு ஏறக்குறைய அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும், அரச குடும்பம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், இறுதி சடங்கில் 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , லண்டனுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரித்தானிய எம்ஐ5மற்றும் எம்ஐ6உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர பொலிஸ் மற்றும் இரகசிய சேவையில் ஈடுபட்டு வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் மறைந்த எலிசபெத் மகாராணியின் உ டலுக்கு நேற்று (18) இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதற்கமைய, மகாராணியின் இறுதி சடங்கில் சுமார் 7.5இலட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஐ.நா பொதுச்சபை அமர்வில் அலிசப்ரி பங்கேற்பு!
Next post “பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்” நூல் வெளியீட்டு விழா!