பொத்துவில்; மௌலவி பசில் கொழும்பு வைத்தியசாலையில் வபாத்

Read Time:1 Minute, 29 Second

பொத்துவில் அனைத்து பள்ளிவாயல் சம்மேளனத்தலைவரும்,பொத்துவில் சபீலுர்ரஸாத் அரபிக்கல்லூரி விரிவுரையாளரும், பொத்துவில் தப்லீக் ஜமாத் அமைப்பின் பொறுப்புதாரியுமான மௌலவி எம்.எல். பசில் (தப்லீக்) இன்று (8) கொழும்பு பொதுவைத்தியசாலையில் வபாத்தானார்.

தப்லீக் பிரச்சாரப்பணிக்காக வேண்டி வெளியூர் ஜமாத் சென்ற பொழுதில் இரவுநேரத் தஹஜ்ஜத் தொழுகைநேரம் மயக்கம் ஏற்பட்டு உடனடியாக பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன்பின்னர் கொழும்பு வைத்தியசாலையில் மாற்றப்பட்டும் தீவிர சிகிச்சை பலனின்றி இன்று வபாத்தானார் .

பொத்துவிலின் மார்க்கப்பணியில் முன்னின்று செயற்பட்ட உலமா மாத்திரமன்றி பொத்துவில் உலமாசபையின் உபதலைவராகவும், பொத்துவிலின் சமூக, சமய, நல்லிணக்கத்திற்காக வேண்டி தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவர் வபாத் ஆகின்ற பொழுதில் 36 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous post முஸ்லிம் காங்கிரஸின் 26 வது பேராளர் மாநாடு ; 6 புதிய செயலாளர்கள் நியமனம்
Next post றிசாத் பதியுதீனுக்கு, ஜனாதிபதி அழைப்பு ;11 ஆம் திகதி சந்திப்பு