மட்டக்களப்பு பிறைந்துறைச் சேனை ;டெங்கு நோயால் 11வயது பாடசாலை மாணவன் வபாத்

Read Time:1 Minute, 9 Second

 

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவின் பிறைந்தறைச்சேனைப் பகுதியில் பாடசாலை மாணவனொருவன் இன்று 12 வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில் மரணமானார் (வபாத்தானார்).

 

பிறைந்துறைச்சேனை பன்சலை குறுக்கு வீதியில் வசிக்கும் ஹயாத்து முஹம்மது றிஸ்பாத் என்ற பிறைந்துறைச் சேனை வாதுலியா வித்தியாலய மாணவரே இவ்விதம் பரிதாபகரமாக மரணமானார்.

 

குறித்த மாணவன் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாக வைத்திய வைத்திய சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று மாலை மரணமானார்.

 

இவரது சடலம் (ஜனாசா) உறவினரிடம் கையளிக்கப்பட்டது.

Previous post இலங்கையின் கடல் எல்லையில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள்பற்றிய கலந்துரையாடல்
Next post காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு