மதுரங்குளியில் இடம் பெற்ற விபத்தில் மாணவன் முஜாரித் ஒருவர் வபாத்

Read Time:1 Minute, 9 Second

(செய்தியாளர்: கரீம் ஏ. மிஸ்காத்)

குருணாகல் ஆரியாகம, கிராமத்தைச் சேர்ந்த ஏ.எம். முஜாரித் என்ற மாணவன் வாகன விபத்தில் மரணமடைந்தார்.

புத்தளம் , மதுரங்குளி, மேர்சி கல்வி வளாகத்தில், தொழில் நுட்பப் பிரிவில், நீர் குழாய் பொருத்தும் பகுதியில் கல்வி கற்றுவந்த இவர், ஒருவருட வதிவிட கற்கையினை முடித்து, நேற்றைய தினம்(27-05-2016) விடுகை விழாவின் பின், காலை 10:30 மணியளவில் வீடு செல்வதற்கு பேரூந்துக்கு சென்றவேளையே, பிக்கப் ரக வாகனத்தில் மோதுண்டார்

காயமுற்ற நிலையில் இருந்த இவரை, புத்தளம் வைத்தியசாக்கு கொண்டு சென்று, பின்பு கெழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடம்மாற்றம் செய்ப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி மரணமானார்

Previous post முஸ்­லிம்­களை சரி­ச­ம­மாக நடத்­தா­விட்டால் சரி­யான தீர்வை எங்­களால் எட்ட முடி­யாது – சிவா­ஜி­லிங்கம்
Next post நாகவில்லு ரசூல் நகர் ஜூம்ஆ மஸ்ஜித் இமாம் ஷபீக் மௌலவி காலமானார்.