மாலிகாவத்தையில் வசிக்கும் 577 குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு

Read Time:1 Minute, 9 Second

மாலிகாவத்த, அப்பல்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 577 குடும்பங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதிக்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலிகாவத்த, அப்பல்வத்த பிரதேசத்தில் வீடுகள் பலவற்றை உடைப்பதற்கு எதிராக அந்த பிரதேசத்தில் வசிக்கும் சிலரால் தாக்கல் செய்த வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கொம்பனித்தெரு பகுதியில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கு நீதிமன்றம் முன்னதாகவே அனுமதி அளித்துள்ளது.

இதேவேளை அப்பல்வத்த பிரதேசத்தில் உடைக்கப்படும் வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடமைத்து கொடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (ad)

Previous post நாட்டின் பிரி­வி­னைக்கு எதி­ராக முஸ்­­லிம்­கள் செயல்­பட்­ட ­தா­லேயே அவர்கள் இர­வோடு இர­வாக வடக்கில் இருந்து துரத்­தப்­பட்­டா ர்கள் : வஜிர தேரர்
Next post புத்தளத்தில் ஊழலுக்கு எதிராக சத்தியாக்கிரகம்