முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை கண்டனத்திற்குரியது: மிச்சேல்

Read Time:1 Minute, 36 Second

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டதை அமெரிக்கா கண்டிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சிசன் தெரிவித்துள்ளார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசன் நேற்று புதன்கிழமை யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது அங்கு நடைபெற்ற, யாழிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட 23 ஆவது ஆண்டு நினைவு தினத்திலும் கலந்துகொண்டார்.
அங்கு கருத்துக்கூறிய அமெரிக்க தூதுவர்,

யாழ்.ஒஸ்மானியக் கல்லூரியின் அபிவிருத்திக்கும், விஞ்ஞான ஆய்வு கூடம் அமைப்பதற்கு நிதி உதவி வழங்குவதாகவும் இந்த உதவிகளை அமெரிக்க இளைஞர் கழகத்தின் ஊடாக புரிவதாகவும் உறுதியளித்தார்.

இச்சந்திப்பில், வடமாகாண சபை உறுப்பினர் ஜஸ்மின் அயூப், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ முன்னாள் தலைவர் எம்.எஸ்.ரஹிம், உலமா சபைத் தலைவர் அஸிஸ் மௌலவி, எம்.என்.எம். நபீஸ், எம். நிலாம், எம்.எல்.லாபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.tm

Previous post பிரதிக் கல்விப் பணிப்பாளர், பிரதி அதிபர் பிணையில் விடுதலை
Next post ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது!– சட்ட மா அதிபர்