மு.கா பேராளர் மாநாட்டிற்கு கட்சியால் இடைநிறுத்தப்பட்ட எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள ஹக்கீம்!

Read Time:2 Minute, 16 Second

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் செயலாளரினால் அழைப்பிதழ் கடிதம் எல்லோருக்கும் அனுப்பப்பட்ட நிலையில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் விசேட கவனம் செலுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கமைய பேராளர் மாநாட்டில் பைஷால் ஹாசிம் ,எச் எம் எ ஹரிஸ், எம் எஸ் தௌபீக் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வகித்த பதவிகளை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என்று சில உயர்பீட உறுப்பினர்கள் கூறிவந்த நிலையில் இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு கட்சியின் தலைமையால் அழைப்பு விடுக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை இரவு உயர்பீட கூட்டம் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ள நிலையில், திங்கட்கிழமை பேராளர் மாநாடு புத்தளத்தில் நடைபெற உள்ளது. உயர்பீட கூட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தால் அந்த உயர் பீட கூட்டத்தில் சர்ச்சைகள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சிக்குள் இணைத்தால் சில உயர்பீட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகலாம் என உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

திகாமடுல்ல நிருபர்
Previous post கால்வாய்களை புனரமைக்க QR முறைக்கு வெளியே எரிபொருளை வழங்க தீர்மானம் – களனி கங்கை வெள்ளத்தை கட்டுப்படுத்த இரண்டு புதிய நீர்த்தேக்கங்கள்!
Next post சம்மாந்துறை SSC கழகத்திற்கு கடினபந்து கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு!