மூதூரில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு எதிர்வரும் 25ஆம், 26ஆம் திகதிகளில்

Read Time:1 Minute, 28 Second

மூதூர் முறாசில்-

இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் அனுசரணையில் மூதூர் பீஸ் ஹோம் அமைப்பினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்காக நடாத்தப்படவுள்ள கற்பித்தலுடனான செயற்பாடுகள் சம்பந்தமான இரண்டு நாள் செயலமர்வு எதிர்வரும் 25ஆம், 26ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

 
மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் துறைசார் நிபுணத்துவ வளவாளர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ள இச்செயலமர்வில் மூதூர் பிரதேசத்தைச் சோந்த 50 முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 
இச்செயலமர்வின் போது மாணவர்களினது நற்குணங்களையும் நல்ல பழக்க வழக்கங்களையும் விருத்தி செய்தல், உடல்சார்பான திறன்களை விருத்தி செய்தல், தனிப்பட்ட மற்றும் சமூகம் சார்பான திறன்களை விருத்தி செய்தல், மொழி மற்றும் தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்தல் உள்ளிட்ட பல தலைப்புக்களில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக பீஸ் ஹோம் அமைப்பின் தலைவர் எஸ்.எச்.அமீர் தெரிவித்தார்.

 

Previous post நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு தொடர்பில் சபையில் குழப்பநிலை!
Next post போதைப் பொருள் கடத்தலுக்கு தூக்குத் தண்டனையே பொருத்தம் – பிரதமர்