மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான புன்யாமீன் காலமானார்

Read Time:1 Minute, 14 Second

மூத்த ஊடகவியலாளரும், பிரபல எழுத்தாளருமான கலாபூஷணம் புன்யாமீன் (55) சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று (10) காலை கண்டி வைத்தியசாலையில் காலமானார்.

இவர் அன்மையில் புனித மக்காவுக்கு உம்ரா கடமைக்காகச் சென்று திரும்பும் வேலையில் சுகவீனமுற்று துபாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிலகாலம் அங்கு சிகிச்சை பெற்று பின்னர் இலங்கை வந்த அவர் பூரண சுகம் கிடைக்காமையினால் சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (10) காலை இறையடி சேர்தார்.

இவர் விக்பீடியாவின் நீண்டகால தமிழ் செய்தியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை உடதலவின்னயில் நடைபெறும் என அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous post வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (2)
Next post தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 04 மாடிக் கட்டிடம் கல்சிஸ்சையில் திறப்பு