வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் இலங்கை ஆண்கள்!

Read Time:3 Minute, 21 Second

இலங்கையைச் சேர்ந்த பல குடும்பங்களின் சமீபத்திய வாழ்வாதாரத் தொழிலாக விபச்சாரம் உருவெடுத்துள்ளது. அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் அதே வேளையில், 20 – 40 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும் தற்போது வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

குறித்த தொழில்துறையில் இருப்பவர்களின் கருத்துப்படி, இலங்கையின்  பொருளாதாரத்துறை வெகுவாக மோசமடைந்து வரும் கடந்த சில மாதங்களுக்குள், பெருமளவிலான ஆண்கள் பாலியல் வலைத்தளங்களில் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

இந்த வலைத்தளங்களில் இலங்கை என்ற பிரிவுக்குள் தேடும் போது பட்டியலிடப்பட்ட இலங்கை ஆண்கள்  20 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கான கட்டணம் சேவையைப் பொறுத்து தீர்மானி்க்கப்படுகிறது.

பெரும்பாலும் 20 அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 500 அமெரிக்க டொலர்கள் வரை இவர்களுக்கான  கட்டணம் சேவையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

கொட்டாவையைச் சேர்ந்த 22 வயதான பாலியல் தொழிலாளி ஒருவரை டெய்லி மிரர் பத்திரிகை தொடர்பு கொண்டு பேசிய போது, வேலையின்மை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின் சுமையினால், தான் இந்தத் தொழில்துறைக்கு வர நிர்ப்பந்திக்கப் பட்டதாக அவர் தெரிவித்தார். அழைப்புகள் மற்றும் சேவையைப் பொறுத்து ரூபாய் 15000 முதல் ரூபாய் 50000 வரை தான் பெறுவதாகவும் இந்தத் துறையில் விரைவாக பணம் சம்பாதிக்க முடிவதால் அதைத் தனது குடும்பத்திற்கு தர முடிவதாகவும், தான் எப்படியும் ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஆண்களோ அல்லது பெண்களோ பாலியல் சேவைகளை வழங்கும் இணையத்தளங்களைச் செயற்படுத்துவது சட்டவிரோதமானது  மேலும் அது இரு தரப்பிலும் பரஸ்பரமாக ஒருமித்த  தொடர்பாக இருப்பதாலும் சட்டப்பூர்வ பணப்பரிமாற்றம் நடைபெறாததாலும் இந்த வர்த்தகத்தை அடையாளம் காண்பது இலகுவானதல்ல என பொலிஸ் அதிகாரிகள் டெய்லி மிரருக்கு தெரிவித்தனர்.

குறிப்பிட்ட ஒரு சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்படாதவிடத்து  விசாரணைகளை மேற்கொள்ளவோ மேலதிக தகவல்களைப் பெறவோ முடியாதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous post பாராளுமன்ற நுழைவு வீதியில் போராட்டம்!
Next post பாண் விலை குறைப்பு!