ஹரிஸ் எம்பி யினால் சம்மாந்துறையில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Read Time:1 Minute, 22 Second

-எஸ்.அஷ்ரப்கான்-

 

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சம்மாந்துறை கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்தின் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையில் கடந்தவாரம் நடைபெற்றது.

 
பாடசாலை அதிபர் ஏ.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும்,
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.றனூஸ், கிழக்கு மாகாண
சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்வு அதிகாரி யூ.எல்.பஸீர், சம்மாந்துறை
வலயக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் மற்றும் ஆசிரியர்கள்,
பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 
இதன்போது அதிதிகளினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி
வைக்கப்பட்டன.

akhan4   akhan5

Previous post கல்முனை ‘எபிக்’ கல்வியகத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ‘O/L’ தின நிகழ்வும்
Next post அப்பிள் மற்றும் சம்சுங்கின் ஒரு நொடி வருமானம் எவ்வளவு?