06 மாத காலப்பகுதியில் சவூதியில் 100 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - Sri Lanka Muslim

06 மாத காலப்பகுதியில் சவூதியில் 100 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Contributors
author image

World News Editorial Team

சவுதி அரேபியா , சிரிய நாட்டைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்கா ருக்கும் , சவுதியைச் சேந்த ஒருவருக்கும் தலையை வெட்டி நேற்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதன்படி இவ்வருடத்தில் அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வருட எண்ணிக்கையான 90 ஐ மிஞ்சியுள்ளது.

 

சிரியாவைச் சேர்ந்த இஸ்மாஹெல் அல்-தவ்ம் என்ற நபர் தடைசெய்யப்பட்ட எம்பெடமைன் வில்லைகளை கடத்தினார் என்ற குற்றச்சாட்டில்  நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

கடந்த 1995 ஆம் ஆண்டில் அந்நாட்டில் 192 பேருக்கு தலைவெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவே அந்நாட்டில் வருடமொன்றில் நிறைவேற்றப்பட்ட அதிகப்படியான மரண தண்டனை எண்ணிக்கையாகவுள்ளது.

 

எனினும் இவ்வருடத்தில் இத்தொகையை சவுதி அரேபியா முந்தக்கூடிய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகின்றது.

 

 

 

Web Design by Srilanka Muslims Web Team