1000 கப்ர்களைத் தோண்டிய ஜனாசா நலன்புரி அமைப்பு! - Sri Lanka Muslim

1000 கப்ர்களைத் தோண்டிய ஜனாசா நலன்புரி அமைப்பு!

Contributors

காத்தான்குடியில் 2013 ஆம் ஆண்டு தொடங்கிய ஜனாசா நலன்புரி அமைப்பால் கப்று வெட்டுதல், ஜனாசாவுக்கான கபன் துணி வழங்குதல், ஜனாசாக்களை வைத்தியசாலைகளில் இருந்து வாகனத்தில் வீடுகளுக்கு கொண்டு போய் கொடுத்தல்  போன்ற காத்திரமான மனிதநேயப் பணிகள், ஒரு ரூபாயேனும் கூலியாகப்ட பெறாமல் இலவசமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணியின் ஓர் அங்கமாக ஆயிரமாவது குழி (கப்ர்) செவ்வாய்க்கிழமை இரவு (22), காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மைய வாடியில் தோண்டப்பட்டது.

காத்தான்குடி, புதிய காத்தான்குடி, பூநொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய், 19ஆம் வட்டாரம் ஆகிய பிரதேசங்களில், காத்தான்குடி ஜனாசா நலன்புரி அமைப்பின்  பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Web Design by Srilanka Muslims Web Team