1000 தொன் தங்கப் புதையலைத் தோண்டும் முயற்சியில் பொதுமக்களும் இறங்கியதால் அதிகாரிகள் திணறல்! - Sri Lanka Muslim

1000 தொன் தங்கப் புதையலைத் தோண்டும் முயற்சியில் பொதுமக்களும் இறங்கியதால் அதிகாரிகள் திணறல்!

Contributors

உன்னாவோவில் 1000 தொன் தங்க புதையலை எடுக்க தொல்பொருள் துறையினர் தோண்டி வரும் நிலையில், சுற்று வட்டாரங்களில் உள்ள பழங்கால கோட்டைகளில் தங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் மக்களும் தோண்ட தொடங்கியுள்ளனர். இது குறித்து தொல்பொருள் துறை அதிகாரி கூறியதாவது: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் உள்ள 19ம் நூற்றாண்டு கோட்டையில் 1,000 தொன் தங்கம் உள்ளதாக சோபன் சர்கார் என்ற சாமியார் கூறியதையடுத்து அங்கு தொல்பொருள் துறை கடந்த 18ம் தேதி முதல் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதுவரை 7 அடி தோண்டப்பட்டுள்ள நிலையில், ஒரு ஆணி, உடைந்த வளையல்கள், சில மண்பாண்டங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கிடையே, மற்ற வரலாற்று பழமையான இடங்களைச் சுற்றி பொதுமக்களில் சிலர் தங்கம் கிடைக்கும் என்ற ஆசையால் பல பகுதிகளில் தோண்டுகின்றனர். இதனால், பழமையான கோட்டைகள், கோயில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் சேதம் அடைந்துள்ளன. புதையல் தேடும் இந்த மக்களை தடுக்கவோ, புராதன கட்டிடங்களை பாதுகாக்கவோ எங்களிடம் பாதுகாவலர்கள் இல்லை. இப்படி தோண்டும் ஆட்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். அதனால் பழமையான இடங்களை பாதுகாக்க முதல்வர் அகிலேஷ் யாதவ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்பொருள் துறை கடிதம் எழுதியுள்ளது என அதிகாரி கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team