13, 14ஆம் திகதிகளில் வாகன நெரிசல் ஏற்படலாம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - Sri Lanka Muslim

13, 14ஆம் திகதிகளில் வாகன நெரிசல் ஏற்படலாம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Contributors

நாளையும் 13ஆம் திகதி மற்றும்  நாளை மறுதினமும் 14ஆம் திகதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பெரும்பாலான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நாளையும் நாளை மறுதினமும் இலங்கை வரவிருப்பதால் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

விசேடமாக கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி, பேஸ்லைன் வீதி, பௌத்தாலோக்க மாவத்தை, பம்பலப்பிட்டி சந்தியில் இருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான காலி வீதி ஆகியவற்றில் எதிர்வரும் இரு தினங்களுக்கு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. எனவே- கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் போக்குவரத்துக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் சாரதிகளிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்தார்.

Web Design by Srilanka Muslims Web Team