15 வீதமானோர் வடக்கு கிழக்கில் சிறுநீரக நோயாள் பாதிப்பு! - Sri Lanka Muslim

15 வீதமானோர் வடக்கு கிழக்கில் சிறுநீரக நோயாள் பாதிப்பு!

Contributors

ஆசியப் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கிருமி நாசினிப் பாவனை எட்டு மடங்கு அதிகமாகக் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக் காட்டியுள்ளது.

தேவையற்ற கிருமிநாசினிப் பாவனை காரணமாகவே சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் இக்கிருமி நாசினி பாவனையே காரணம். அதனால் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மாத்திரமல்லாமல் முழு நாட்டிலும் சிறுநீரக நோய்க்கு உள்ளாகக் கூடிய அச்சுறுத்தலுக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நாட்டில் சிறுநீரக நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிதி அமைச்சு, நீர்வழங்கல், வடிகாலமைப்பு ஆகிய அமைச்சுகளின் அதிகாரிகள் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகள், துறைசார் புத்திஜீவிகள் ஆகியோர் பங்குபற்றிய கலந்துரையாடலொன்று கொழும்பில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போதே மேற்படி விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களில் 15 வீதமானோர் சிறுநீரக நோயாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடெங்கிலும் சுமார் 25,000 சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாகவும், இவர்களில் நாளொன்றுக்கு 13 பேர் உயிரிழப்பதாகத் தெரிய வருவதாகவும் டாக்டர் பாதெனிய மேலும் கூறினார்.(tti)

Web Design by Srilanka Muslims Web Team