அசாத் சாலிக்கு எதிரான நடவடிக்கை; அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு - Sri Lanka Muslim

அசாத் சாலிக்கு எதிரான நடவடிக்கை; அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

Contributors

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி மற்றும் அவரது சகோதரி ஆகியோருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தொடர்பாக ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (24) கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை கேட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அறிவித்ததன் பின்னர், பல்வேறு மோசடிகள் தொடர்பாக ஒன்பது வழக்குகள் பற்றிக் குறிப்பிட்ட நீதவான் அறிக்கை கோரியுள்ளார்.-(tm)

Web Design by Srilanka Muslims Web Team