ஷரியா சட்டத்தை அமுல் படுத்துவதன் மூலம் மட்டுமே பல குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் - Sri Lanka Muslim

ஷரியா சட்டத்தை அமுல் படுத்துவதன் மூலம் மட்டுமே பல குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும்

Contributors

கசினோ, விபச்சாரம் மற்றும் போதைப் பொருள் விற்பனை என்பன நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வர்த்தகங்களாக இருப்பதாகவும் இலங்கையில் ஷரியா சட்டத்தை அமுல் படுத்துவதன் மூலம் மட்டுமே அவற்றை தடுத்து நிறுத்த முடியும் என விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் .

கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இலங்கையில் கசினோ, விபச்சாரம் மற்றும் போதைப் பொருள் விற்பனை என்பன பெருகியுள்ளன.

இவற்றை 100 வீதம் தடுத்து நிறுத்த வேணடுமானால் மத்திய கிழக்கு நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஷரியா சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவற்றை முற்றாக தடுத்து நிறுத்த முடியாது.

கசினோ வர்த்தகத்தை இலங்கையில் ஊக்குவிக்க அரசாங்கம் விசேடமாக எதனையும் செய்யவில்லை. அங்கங்கே இருக்கும் கசினோ வர்த்தகத்தை ஒரு இடத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் எடுத்துள்ளது.

எதிரக்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியே இலங்கைக்கு கசினோ சூதாட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தது. ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை தவிர அரசாங்கம் புதிதாக எந்த அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார் .-TC

Web Design by Srilanka Muslims Web Team