16,500: பல்கலைக்கழக அனுமதி பெறமுடியாத மாணவர்கள் வெளிநாடுகளில் கற்கை! - Sri Lanka Muslim

16,500: பல்கலைக்கழக அனுமதி பெறமுடியாத மாணவர்கள் வெளிநாடுகளில் கற்கை!

Contributors

 

(எம்.எஸ். பாஹிம், ஸாதிக் ஷிஹான்)

(Tinakaran)

பல்கலைக்கழகம் அனு மதி பெற முடியாத சுமார் 16,500 மாணவர்கள் வருடாந்தம் வெளிநாட்டில் சென்று கற்கின்றனர். இதனால் கடந்த ஐந்து வருடகாலத்தில் 1115 மில்லியன் டொலர் அந்நிய செலாவணியை இழக்க நேரிட்டதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

இந்த நிலையை மாற்றுவதற்காகவே இலங்கை யில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் நிர் மாணிக்கப்பட்டு தகுதியுள்ள இலங்கை மாண வர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளையை அனுமதிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற் படுத்தப்பட்டுள்ளது. அமைதி நிலைமை காண ப்பட்டாலே முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வருவர். யுத்தம் முடிவடைந்தவுடன் தேர்தல் நடத்தியிருந் தால் வாக்களிக்கும் வீதம் குறைவாக இருந்திரு க்கும். ஆனால், சகல மக்களையும் மீள்குடியேற்றிய பின்னரே அரசாங்கம் தேர்தல் நடத்தியது. 80 வீதமான மக்கள் வடக்கில் வாக்களித்தனர்.

பதிவு செய்யப்பட்ட 57 கட்சிகள் வடக்கில் போட்டியிட்டன. இது வரலாற்றில் மிகவும் முக்கியமான விடயமாகும். நாம் ஜனநாயகத்தை நிலைநாட்டுகையில் ஐ.தே.க. தமக்குள் அடித்துக்கொண்டு ஜனநாயகத்தை புதை குழியில் தள்ளுகிறது.

வருடாந்தம் 16,500 மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்கின்றனர். 3 இலட்சம் பேர் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றினாலும் 25 ஆயிரம் பேரே பல்கலைக்கழகம் செல்கின்றனர். பணமுள்ளவர்களே வெளிநாடு சென்று கற்கின்றனர்.

வெளிநாட்டிற்கு கற்கச் செல்லும் மாணவர்களில் மருத்துவ துறையில் கற்பதற்காக ஆயிரம் மாணவர்கள் செல்கின்றனர். கடந்த வருடங்களிலும் இதேபோன்று பெருமளவு மாணவர்கள் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.

கடந்த 5 வருட காலத்தில் 1115 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச் செலாவணியை இழக்க நேரிட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு தனியார் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படுகின்றன. மீரிகமவில் லங்கெஷ்டர் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளதோடு இங்கு 10 ஆயிரம் மாணவர்கள் கற்கலாம். இதில் 4 ஆயிரம் இலங்கை மாணவர்களும் 6000 வெளிநாட்டு மாணவர்களும் கற்க வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

மேலும் பல தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க உயர் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். பல்கலைக்கழகம் செல்ல தகுதி இருந்தும் வெட்டுப்புள்ளி காரணமாக அனுமதி கிடைக்காத மாணவர் களுக்கு இங்கு அமைக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கற்கச் சந்தர்ப்பம் கிடைக்கும்.

மீரிகம வலயத்தில் அமைக்கப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கு தலா 120 மில்லியன் டொலர் முதலிடப்பட உள்ளது. 120 ஏக்கர் காணி, பல்கலைக்கழகம் அமைக்க வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக 750 நேரடி தொழில் வாய்ப்பு கிடைக்கும்.

கல்வியை இறக்குமதி செய்யும் நாடாக இன்றி ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கை மாற வேண்டும். எமக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும். எமது இந்த நடவடிக்கையை ஐ.தே.க.எதிர்க்காது. எதிர்காலத்தில் வடக்கிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்க முடியும்.

 

Web Design by Srilanka Muslims Web Team