ரயிலில் மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு - பெற்றோருக்கும் இன்று திருமணம்! - Sri Lanka Muslim

ரயிலில் மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு – பெற்றோருக்கும் இன்று திருமணம்!

Contributors

ரயிலின் மலசலகூடத்திலிருந்து மீட்கப்பட்ட சிசுவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இன்று 17 உத்தரவிட்டுள்ளார்.

பிணை வழங்கப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்களான இளம் தம்பதியினருக்கு இன்று திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதன் பின்னரே அவர்கள் விளக்கமறியலில் வைக்கத் தயாராக இருப்பதாகவும் சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி லக்ஷான் டயஸின் தெரிவித்த கருத்திற்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்..

டி.என்.ஏ அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக குழந்தை மற்றும் சந்தேகநபர்களை எதிர்வரும் 21ம் திகதி காலை 9 மணிக்கு அரசு பரிசோதகர் முன் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அத்தோடு குறித்த இளம் தம்பதிகளை தலா 5 இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team