யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை உலகறியச் செய்த அப்துல் ரஹீம் ஆசிரியர் வபாத்!

0 0
Read Time:3 Minute, 24 Second
1979ம் ஆண்டு ‘யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்’என்னும் அரியதொரு வரலாற்று நூலை ,வெளியிட்டு,  வரலாறு பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய கலாபூஷணம் எம்.எஸ்.ஏ.அப்துல் ரஹீம் ஆசிரியர் அவர்கள் நேற்று (23.03.2023) இறையடி சேர்ந்துவிட்டார்கள்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாறாயினும் , யாழ்ப்பாண முஸ்லிம்களின. வரலாறாயினும்  ,அவை பற்றிஎழுதியவர்களுள் அனேகமானவர்கள்  முஸ்லிம் அல்லாதவர்கள்தான்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் 44 வருடங்களுக்கு முன்பே ,யாழ் முஸ்லிம்கள் பற்றிய அரிய வரலாற்றுக் குறிப்புக்களைத் தொகுத்து எழுதிய அவரது பணி மகத்தானது.

தேசியக்கல்வி நிறுவனத்தின்  பிரதம செயற்றிட்ட அதிகாரியும் ,சிரேஷ்ட பட்டதாரி ஆசிரியருமான இவர் கடந்த 61வருடங்களுக்கு முன் எழுத்துலகில் பிரவேசித்தவராவார் .1962 இல் தினகரன் பத்திரிகையில் ’மதுகரன்’என்ற புனைப்  பெயரில் பிரவேசித்த இவரது கதைகள் சமுதாய அமைப்்பு முறையில் ஒதுக்கப்படுபவர்களின் அவல நிலையையும் ,அதற்கான காரணங்களையும் கருவாக்க் கொண்டு படைக்கப்பட்டவையாகும்.

1990 ம்  ஆண்டு வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின் , அச் சம்பவத்தையும் உள்ளடக்கி 2008ம் ஆண்டு இரண்டாம் பதிப் பாக இவரது ‘யாழ் முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்’ நூலானது   தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

இவரது எழுத்துத்துறை பங்களிப்புக்காக 1999ம் ஆண்டு இலங்கை கலாசாரத்திணைக்களம் ‘கலாபூஷணம்’ விருது வழங்கி கௌரவித்தது.யாழ் மண்ணில் முதன் முதலாக கலாபூஷணம் விருது பெற்றவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ரஹீம் ராஜி  அவர்களின் தந்தையான ரஹீம் ஆசிரியர் அவர்கள்,இலங்கையில்  நடைபெற்ற நான்காவது அனைத்துலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டின் சிறப்பு மலரில் பல  கட்டுரைகளை எழுதியிருந்தார்.

அண்மைக் காலமாக  கண்பார்வை குறைபாடு உள்ளவர்காக இருந்தாலும் சமூகத்தில் வரலாறு பற்றிய பற்றிய விழிப்புணர்ச்சியை ,ஏற்படுத்திய ரஹீம் ஆசிரியர் அவர்களின் உயர்பணியை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

அவரது பாவங்களை மன்னித்து  மேலான பிர்தௌஸ் என்னும் சுவனத்தை வழங்குவானாக! அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு பொறுமையையும் மன அமைதியையும் வழங்குவானாக!

 

 

Yarl Azeem
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %