2வது டி20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி..! - Sri Lanka Muslim

2வது டி20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி..!

Contributors

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனுஷ்க்கு குணதிலக்க 56 ஓட்டங்களையும் பெதும் நிஸங்க 37 ஓட்டங்களையும் அசேன் பண்டார 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் அதிகபட்சமாக ஒபேய் மெக்கொய் 23 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் லக்ஸான் சந்தகென் 3 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதற்கமைய மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team