20 இற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் எம்பீக்களுக்கு வாழ்த்து..! » Sri Lanka Muslim

20 இற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் எம்பீக்களுக்கு வாழ்த்து..!

Contributors
author image

A.H.M.Boomudeen

பெரும்பான்மை இனத்தினரின் சிம்ம சொற்பனமாக திகழும் – 2/3 ஐ தன்வசம் கொண்டுள்ள ஜனாதிபதியுடனும் அரசுடனும்
முஸ்லிம் சமூகம் இன்னும் இன்னும் முட்டி மோதி நிற்பது ஆரோக்கியமானதல்ல.

இன்று மாலை இடம்பெறவுள்ள – 20 வது திருத்தத்திற்கான வாக்கெடுப்பில் – முஸ்லிம் சமுகத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற மக்கள் காங்கிரஸூம் – முஸ்லிம் காங்கிரஸூம் ஆதரவாக வாக்களிப்பதே சாலச் சிறந்தது.

19 ஐ நீக்கி 20 ஐ கொண்டுவருவது – 20 இல் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அதி உச்ச அதிகாரம் – பிரதமரின் அதிகாரம் குறைக்கப்படுகிறது என்பதில் முஸ்லிம் சமுகத்திற்கு என்ன பாதகம் வந்துவிடப் போகின்றது.

முஸ்லிம் எம்பி ஒருவர் – இந்த நாட்டில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளை வகிக்க சந்தர்ப்பம் இருக்குமாக இருந்தால் மாத்திரமே – முஸ்லிம் சமுகம் அது குறித்து சிந்திக்கலாம் / சிந்திக்கவும் வேண்டும்.

சஜித் -ராஜித – சம்பிக்க மற்றும் ஜே.வி.பி.,அது தொடர்பில் சிந்திக்கட்டும். நாம் எதற்காக அது குறித்து அலட்டிக் கொள்ள வேண்டும்?

நாம் வாக்களிக்காத அரசாங்கம் என்பதற்காக கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்ற மனோ நிலையிலிருந்து விடுபட வேண்டிய தருணம் இது.

முகா மற்றும் மகா வின் 9 எம்பீக்களும் இன்று எதிர்த்து வாக்களித்தாலும் – சுமார் 154 வாக்குகள் 20 இற்கு ஆதரவாக வழங்கப்படத்தான் போகின்றது. இது – முஸ்லிம்கள் மீதான வெறுப்பை மேலும் உக்கிரமடையச் செய்யத்தான் போகின்றது.
அதேவேளை – இந்த 9 எம்பீக்களும் ஆதரவு வழங்கினால் – முஸ்லிம் சமுகம் மீதான ஆத்திரப் பார்வை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

இல்லையேல் – இன்று ரிஷாத் போன்று – நாளை ஹக்கீமாக இருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறான நிலை வந்தால் – இன்று மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ரிஷாத் பதியுதீன் மீதான அடக்கு முறைக்கு எதிராக முகநூலில் வீர வசனம் பேசுவது போல் – நாளை, முகா ஆதரவாளர்களும் முகநூலில் வீர வசனம் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்க முடியுமே ஒழிய ஒன்றுமே புடுங்க முடியாது.

20 இற்கு – ஆதரவாக வாக்களிக்கவுள்ள முஸ்லிம் எம்பீக்களுக்கு முன் கூட்டிய வாழ்த்துகள்.

Web Design by The Design Lanka