20 ஓவர் உலக கிண்ணம்: ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் தகுதி - Sri Lanka Muslim

20 ஓவர் உலக கிண்ணம்: ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் தகுதி

Contributors

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

கடந்த 2007ம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ண போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டது, தென் ஆப்ரிக்காவில் நடந்த இப்போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் 5வது 20 ஒவர் உலக கிண்ண போட்டி, அடுத்தாண்டு வங்கதேசத்தில் நடக்கிறது.

இந்தப்போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. முதன்மை 10 அணிகளும், தகுதிசுற்று மூலம் 6 அணிகளும் இந்தப்போட்டியில் விளையாடும்.

இப்போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் துபாயில் தற்போது நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டி முடிவில் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றன.

அயர்லாந்து அணி ஆங்காங்கை 85 ஓட்டங்களில் வீழ்த்தியது. இதன்மூலம் 6வது வெற்றியை பெற்று அந்த அணி உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றது.

அயர்லாந்து ஏற்கனவே 2009, 2010, 2012 போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

இதேபோல ஆப்கானிஸ்தான் அணி கென்யாவை 34 ஓட்டங்களில் வென்று 6வது வெற்றியை பெற்று தகுதி பெற்றது.

ஆப்கானிஸ்தான் 3வது முறையாக உலக போட்டிக்கு நுழைந்துள்ளது, இன்னும் 4 நாடுகள் தகுதி பெற வேண்டியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team