2014ல் நடத்தப்படும் எந்தத் தேர்தலும் 2013 வாக்காளர் இடாப்பின்படியே நடைபெறும் - Sri Lanka Muslim

2014ல் நடத்தப்படும் எந்தத் தேர்தலும் 2013 வாக்காளர் இடாப்பின்படியே நடைபெறும்

Contributors

2014 ஆம் ஆண்டு நடத்தப்படும் எந்தத் தேர்தலும் 2013 ஆம் ஆண்டின் வாக்காளர் அட்டவணைப்படியே நடத்தப்படும். இது பற்றி தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஒன்றை நடத்துமாறு தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவிடப் பட்டால், 2013 ஆம் ஆண்டின் வாக்காளர் பெயர் அட்டவணைப்படியன்றி 2012 ஆம் ஆண்டின் வாக்காளர் பெயர் அட்டவணைப்படியே தேர்தல் நடத்தப்படுமென பிரதி தேர்தல் ஆணையாளர் எம். எம். முஹம்மட் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டின் வாக்காளர் பெயர் அட்டவணை டிசம்பர் 31 ஆம் திகதியன்று வெளியாகும் தற்போது இந்தப் பணிகள் குறிப்பிடத்தக்க அளவு பூர்த்தி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களுக்காக 2013 ஆம் ஆண்டின் வாக்காளர் பெயர் அட்டவணை பயன்படுத்தப்படுமென்றும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.(thinakaran)

Web Design by Srilanka Muslims Web Team