2014 வரவு – செலவுத் திட்டம் - இன்று குழுநிலை விவாதம் ஆரம்பம் - Sri Lanka Muslim

2014 வரவு – செலவுத் திட்டம் – இன்று குழுநிலை விவாதம் ஆரம்பம்

Contributors

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்மீதான குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய இன்று முற்பகல் 9.30 க்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு கடந்த வெள்ளிக்கிழமை மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்று காலை 10 மணி தொடக்கம் குழுநிலை விவாதம் ஆரம்பமாகவுள்ளது.

தினமும் மாலை 6 மணி வரை விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவித்த பிரதி சபாநாயகர் சனிக்கிழமைகளிலும் விவாதம்  இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார் .

Web Design by Srilanka Muslims Web Team