
2014 வரவு செலவுத் திட்டம் சொல்லும் சேதி என்ன?
வரவு-செலவுத் திட்ட உரை தொடங்கியது!
பொதுநலவாய மாநாட்டினால் முழு ஆசியாவிற்கும் கீர்த்தி – ஜனாதிபதி 20 வருடங்களுக்கு பிறகு ஆசியாவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் மாநாடு முழு ஆசியாவிற்கும் கீர்த்தியாகும். இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கும் அது வித்திடும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது. அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது. நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு காணி விற்க முடியாது. அப்படி விற்றால் இவ்வருடம் தொடக்கம் வரி அறவீட்டின் கீழ் அது இடம்பெறும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கம் கையகப்படுத்தி தனியார் நிவனங்கள் பல இன்று லாபத்தில் இயங்குகின்றன அரச வியாபாரங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது. அரசாங்க வியாபார நிறுவனங்கள் 54இல் 48 லாபத்தில் இங்குகின்றது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. – ஜனாதிபதி
இரு மின்உற்பத்தி நிலைய பணிகள் நிறைவு பெற்றதும் 600MW மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படும் – ஜனாதிபதி
உள்நாட்டு ஏற்றுமதி வருமானத்தை 10,000 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம் – ஜனாதிபதி
கடந்த வருடம் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.4% இருந்தது. எனினும் இவ்வருடத்தின் முதல் காலாண்டில்பொருளாதார வளர்ச்சி 7.8% ஆகும். – ஜனாதிபதி
காலாண்டில் 7.8% பொருளாதார வளர்ச்சி
2016ம் ஆண்டில் இலங்கையின் கடன் 65% குறையும் – ஜனாதிபதி
இலங்கை கடன் 2016இல் குறையும்
ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கியுள்ளோம் – ஜனாதிபதி
ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு நியமனம்
2016ம் ஆண்டு வரவு – செலவு பற்றாக்குறையை 3.8ஆக குறைக்க நடவடிக்கை – ஜனாதிபதி
தொலைத்தொடர்பு வரி 25% ஆக இருக்கிறது அதில் மாற்றம் ஏற்படுத்தப்படாது – ஜனாதிபதி
1557 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது – ஜனாதிபதி
1557 சதுர கிலோ மீற்றர் கண்ணிவெடி அகற்றம்
தேசத்தை கட்டியெழுப்பும் வரி 2% அதிகரிப்பு
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தேசத்தை கட்டியெழுப்பும் வரி 2% அதிகரிக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி
உர மானியம் ரூ 350: சிறு மற்றும் பெரும்போக காலத்தில் உர மானியம் ரூ 350 ஆக இருக்கும் – ஜனாதிபதி
1000 மில்லியனுக்கு 2000 இபோச பஸ்கள்
இபோச 1000 மில்லியன் ரூபா செலவில் 2,000 பஸ்கள் வழங்கப்படும் – ஜனாதிபதி
2014 ஜனவரி தொடக்கம் விவசாய ஓய்வூதியம்
விவசாய ஓய்வூதிய திட்டத்தை 2014 ஜனவரி தொடக்கம் செயற்படுத்துமாறு யோசனை முன்வைக்கிறேன். 63 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு 1250 ரூபா வீதம் விவசாய ஓய்வூதியம் வழங்கப்படும். அதற்கு 1000 மில்லியன் அரசாங்கம் ஆரம்ப நிவாரண நிதியாக வழங்கும் – ஜனாதிபதி
வடக்கு, தெற்கு நீர், மின்சார திட்டத்திற்கு 1400 மில்லியன்: வடக்கு மற்றும் தெற்கில் குடிநீர், மின்சார திட்டங்களை செயற்படுத்த 1400 மில்லியன் ஒதுக்கீடு – ஜனாதிபதி
சிறுதேயிலை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி
சிறு தேயிலை செய்கை தொழிலை ஊக்குவிக்க வருடாந்தம் ஒரு ஏக்கருக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்கப்படும். தேசிய தெங்கு தொழிலை வலுப்படுத்த எண்ணெய் இறக்குமதி மட்டுப்படுத்தப்படும். தேயிலை, இறப்பர், தேங்கு, கருவா, மிளகு ஏற்றுமதி வலுப்படுத்தப்படும்.
20000 பசுமாடுகள் இறக்குமதி: உள்நாட்டு பால் உற்பத்தியை ஊக்குவிக்க 20,000 பசு மாடுகள் இறக்குமதி செய்யப்படும்.
40% முழு ஆடை பால் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இலங்கை – ஜனாதிபதி
கால்நடை வைத்தியர்களுக்கு 7500 ரூபா மேலதிக கொடுப்பனவு: கால்நடை வைத்தியர்களுக்கு மாதாந்தம் 7500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் – ஜனாதிபதி
வெண்ணெய், தயிருக்கு வரி: வெண்ணெய் மற்றும் தயிர் இறக்குமதிக்கு வரி விதிக்கப்படும் – ஜனாதிபதி
கர்ப்பிணி மற்றும் தாய்மார்களின் போசனை அதிகரிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி
தேசிய பால் மற்றும் முட்டை பாவனையை அதிகரிக்க திவிநெகும மற்றும் சமுர்த்தி திட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி
திவிநெகும திட்டத்தில் 125,000 பண்ணைகள்: திவிநெகும திட்டத்தின் கீழ் 125,000 பண்ணைகள் அமைத்து ஒவ்வொரு பண்ணை உரிமையாளர்களுக்கும் மாதாந்தம் 10,000 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படும் – ஜனாதிபதி
தளபாடங்கள் போக்குவரத்து திட்டத்தை ரத்து செய்ய அனுமதி . முடிந்தளவு உள்நாட்டு உற்பத்தி மரத்தளபாடங்களை பயன்படுத்த விழிப்புணர்வு வழங்கப்படும் – ஜனாதிபதி
68 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு தொழில் முயற்சி உதவி: 68 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் தொழில் முயற்சிக்கு வட்டி இல்லாத கடன் மற்றும் சலுகைகள் வழங்கப்படும். 250,000 ரூபாவிற்கு மேல் இவர்களுக்கு கடன் வழங்கப்படும் – ஜனாதிபதி
புற்றுநோயாளர்களின் 3 வருட வரிசை 6 மாதமாக குறைக்கப்படும்: கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் உள்ள பிரதான வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் நெரிசலை குறைக்க முடியும். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் புற்றுநோயாளி சிகிச்சைப் பெற 3 வருடங்கள் வரிசையில் நிற்க வேண்டும். அதனை 6 மாதங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வைத்தியசாலை ஊழியர்களுக்கு சீருடை கொடுப்பனவு அதிகரிப்பு: வைத்தியசாலை ஊழியர்களுக்கான சீருடை கொடுப்பனவு 500 ரூபாவில் இருந்து 1500 ரூபாவிற்கு அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி
இலங்கையின் இரண்டு பெரிய சிறுவர் வைத்தியசாலைகள் ஆய்வு மத்திய நிலையமாக விரைவில் மாற்றப்படும் – ஜனாதிபதி
கலைஞர்களுக்கு 5 ஓய்வு விடுதி: கலைஞர்களுக்கு சுதந்திரமாக பணியை தொடர ஐந்து ஓய்வு விடுதிகளை அமைக்க தீர்மானித்துள்ளோம். அதற்கான காணியும் ஒதுக்கப்படும்.
பிரிவெனா ஆசிரியர்களுக்கு சம சலுகை
பிரிவெனா கல்வி நவீனமயப்படுத்தப்பட்டு அனைத்து பிரிவெனா ஆசிரியர்களும் ஏனைய ஆசிரியர்கள் பெறும் சலுகைகளை பெறுவர் – ஜனாதிபதி
பல்கலை மாணவர் விடுதி பிரச்சினைக்கு தீர்வு: பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 15000 பில்லியன் ஒதுக்கீட்டில் புதிய விடுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் முதலாம் இரண்டாம் வருட மாணவர்களின் விடுதி பிரச்சினை தீர்க்கப்படும்.
விரிவுரையாளர்களுக்கு 5% கல்விக் கொடுப்பனவு: பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கல்விக் கொடுப்பனவு 5% அதிகரித்து வழங்கப்படும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
தகவல் தொழிநுட்ப வளர்ச்சிக்கு 1000 மில்லியன்: நாட்டின் தகவல் தொழிநுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள ஹம்பாந்தோட்ட தகவல் வலயம் அமைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். நெனசல மத்திய நிலைய திட்டத்தை விரிவுபடுத்தி இணைய வசதிக்கு 1000 பில்லியன் ஒதுக்கப்பட்டும்.
கடல் பல்கலைக்கழகம் உருவாகும்: கடற்படை மற்றும் கடல் பல்கலைக்கழகம் நிறுவப்படும் – ஜனாதிபதி
வீட்டு வசதிக்கு சலுகை கடன்: நகர்புற தொழிலாளர்களின் வீட்டு வசதிக்கு சலுகைக்கடன் – ஜனாதிபதி
கொழும்புக்கு இணையாக பல நகரங்கள்: கொழும்புக்கு இணையாக கண்டி, காலி, அநுராதபுரம், யாழ்ப்பாணம், இரத்தினபுரி, திருகோணமலை நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படும் – ஜனாதிபதி
சட்டத்திற்கு ஐந்தாண்டு திட்டம்: சட்ட மற்றும் நீதித்துறை சேவைகளை மேம்படுத்த ஐந்து ஆண்டு திட்டம்.
இலங்கையில் சர்வதேச நடுவர் மையம்: இலங்கையில் சர்வதேச நடுவர் மையம் அமைத்து அபிவிருத்தி செய்யப்படும் – ஜனாதிபதி
அரச ஊழியர்களுக்கு 1200 ரூபா வாழ்வாதார கொடுப்பனவு: அரச ஊழியர்களின் மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு 2014 ஜனவரி தொடக்கம் 1200 ரூபா அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி
தனியார் துறை ஊழியர்களுக்கும் இவ்வாறு அதிகரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார். தேசிய சம்பள திட்டமும் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளுக்கு 8% கொடுப்பனவு: நீதிபதிகளுக்கான தனிப்பட்ட கொடுப்பனவு 8% அதிகரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு: தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட போதும் அதன் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் தொடர்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்ல அனைவரும் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
–அத தெரண