ஊரடங்கு சட்டம் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை

இன்று முதல் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை: இன்று, ஜுன் 06, சனிக்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கான அனுமதியில் மாற்றங்கள் இல்லை. அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், மற்றும் அலுவலகங்களை…

Read More

பாதுகாப்பு என்ற பெயரில்….

பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். இதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். ராஜபக்ஷ அரசின் இந்தப்படுமோசமான செயல் களைக் கண்டித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டமான அறிக்கையை விரைவில் நாம்வெளி யிடவுள்ளோம். – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான, நீதியான, சட்டத்தை மதிக்கும் சமூகம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியை…

Read More

ராணுவத்தை அனுப்புவேன்’ என்ற டிரம்பின் அறிவிப்பு சாத்தியமா?

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்தை தொடர்ந்து அந்நாடு முழுவதும் பரவிய போராட்டங்களை அடுத்து, போராட்டங்கள் நடக்கும் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்பப்போவதாக அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார். போராட்டங்கள் நடைபெறும் மாகாணங்கள் மற்றும் நகரங்களில் சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகங்களால் பிரச்சனையை தீர்க்க முடியாவிட்டால், தான் ராணுவத்தை அனுப்ப தயாராக உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால், தற்போதைய சூழலில் போராட்டங்களை கட்டுப்படுத்த துருப்புகளை பயன்படுத்துவதை தான் ஆதரிக்கப்போவதில்லை என்று அமெரிக்காவின் பாதுகாப்பு செயலரான மார்க்…

Read More

அலுத்கம சம்பவம் – மூன்று பொலிசார் கடமையில் இருந்து இடைநிறுத்தம்

அளுத்கம பிரதேசத்தில் 15 வயதுடைய முஸ்லீம் சிறுவன் மீதான தாக்குதல் தொடர்பில் 3 போலீசார் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தங்களது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் இம்மூவரும் இடை நிறுத்தப்பட்டுள்ளனர். அண்மையில்  முஸ்லிம் சிறுவன் மீது போலீசார் கொடூர தாக்குதல் மேற்கொண்டமை அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பில் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலர் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது 3 போலீசார் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கூடுதலான விலையில் மணலை விற்பனை செய்வோரின் அனுமதிப்பத்திரம் இரத்து

கூடுதலான விலையில் மணலை விற்பனை செய்வோரின் மணல் நில உரிமையாளர்களுக்கான சுரங்க அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படும் என்று புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் அறிவித்துள்ளது. பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல இதுதொடர்பாக அறிக்கை ஒன்ரை விடுத்துள்ளார். அனுமதிபத்திரம் பெற்ற மணல் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட கட்டணத்திலும் பார்க்க கூடுதலான விலைக்கு மணலை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More