
கடற்படையை சேர்ந்த 712 பேர் இதுவரையில் பூரண குணம்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கை கடற்படையை சேர்ந்த 712 பேர் இதுவரையில் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் 172 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 43 தனிமைப்படுத்தல் முகாம்களில் 4387 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதுவரையில் 13,875 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்….