அஜித்தின் மகன் போர்ட் சிட்டியில் தொழில்?

தனது புதல்வர் 2016ம் ஆண்டு முதல் கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தில் கடமையாற்றி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தனது புதல்வர் சிறந்த கல்வி அறிவைக் கொண்டவர் எனவும், அவருக்கு வெளிநாடுகளில் பட்டப்படிப்புகளுக்கான சான்றிதழ்கள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தனது மகன் போர்ட் சிட்டியில் கடமையாற்றினால், உங்களுக்கு என்ன பிரச்சினை என அஜித் நிவாரட் கப்ரால், ஊடகவியலாளர்களிடம்…

Read More

யானை சண்டை பிடிக்க தகரப்பத்தைகள் அடிபடுவது போல் இலங்கை அடிபட முடியாது – ஏ.எல்.எம்.அதாவுல்லா..!

நூருல் ஹுதா உமர் இனவாதம் பேசுவதை நிறுத்திவிட்டு தேசியவாதம் பேச ஆரம்பிப்போம் என தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார் . கிண்ணியா பொது நூலக மண்ட பத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வின்போது பிரதம கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் . தொடர்ந்தும் உரையாற்றுகையில் இலங்கை சுதந்திரமடைய முன்னர் ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் என நமது நாட்டை ஆக்கிரமிப்பு செய்தார்கள் ஆனால் தற்போது மறைமுகமாக அது நடக்கிறது…

Read More

20ம் திருத்தத்துக்கு வாக்களித்த எம்.பீ க்களுக்கு “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் இதோ வருகிறது.

20A திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க “மாட்டோம், மாட்டோம்” என இரண்டு முறை தாம் இப்போது அங்கம் வகிக்கும் அரசுக்கு இடித்துக்கூறி, பாவமன்னிப்பு பெற சந்தர்ப்பம் வருகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ எம்பி மேலும்…

Read More

பரவிபாஞ்சான் குளத்தில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் பரவிபாஞ்சான் குளத்தில் நீறாட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மூழ்கிய இரண்டு சிறுவர்களும் மிட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது. முள்ளிப்பொத்தானை – ஈச்சநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 14 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன், தம்பலகாமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

பிள்ளைகளால் தாக்கப்பட்டு பெற்றோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு : கவலைக்குரியதென்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

எம்.மனோசித்ரா) கிளிநொச்சியில் மகனால் தாக்குதலுக்குள்ளான தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி மகனால் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த தந்தை நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 11 ஆம் திகதி கிளிநொச்சி – கனகபுரம் பிரதேசத்தில் 20 வயது மகனால் 53 வயதுடைய தந்தை தாக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மகனால் தாக்குதலுக்குள்ளாகி…

Read More

மேல் மாகாணத்தில் ‘தஹம்’ பாடசாலைகள் மீள் ஆரம்பம்..!

ஞாயிறு தினங்களில் பௌத்த சிறுவர்களுக்காக நடாத்தப்படும் தஹம் பாடசாலைகள் மேல் மாகாணத்தில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏழு மாத காலத்திற்குப் பின்னர் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை அனைத்து இளைஞர்களும் வாரம் ஒரு முறையாவது விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான கட்டாய நடைமுறை அவசியப்படுவதாக அண்மையில் பிரதமர் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது. இதேவேளை, இலங்கையில் மூன்றாவது கொரோனா அலை உருவாகக் கூடும் எனும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

விஜேதாசவுக்கு எதிராக கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும், கெஹலிய..!

அரசு தொடர்பான விடயங்களை, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வைத்துக் கூட பேசாது ஊடகங்கள் ஊடாக கருத்து வெளியிட்டு வரும் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் கெஹலிய ரம்புக்வெல. எதிர்பார்த்த அமைச்சுப் பதவி கிடைக்காத நாளிலிருந்து அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை விமர்சித்து வரும் விஜேதாச, தான் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பதாக தெரிவிக்கிறார். இந்நிலையில், துறைமுக நகரம் பற்றி அவர் வெளியிட்டிருந்த கருத்துக்களும் கேள்விகளும் கட்சிக்குள் பாரிய எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது….

Read More

ஜனாதிபதியால் என்னை ‘அடக்க’ முடியாது, தேரர் சவால்..!

தன்னைக் கொலை செய்யலாம் ஆனாலும் தனது வாயையடைத்து கட்டுப்படுத்த முடியாது என சவால் விடுத்துள்ளார் அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர். மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக இந்த அரசாங்கம் இயங்கவில்லையென ஆனந்த தேரர், விமல் வீரவன்ச மற்றும் கம்மன்பில கூட்டணி தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், விஜேதாச ராஜபக்சவும் இவ்வணியில் இணைந்து அபயராம விகாரையில் செய்தியாளர் சந்திப்பு நடாத்தி வருகிறார். இப்பின்னணியில், ஜனாதிபதி நேரடியாக ஆனந்த தேரரை தொடர்பு கொண்டு பேசியிருந்ததாகவும் தகவல் வெளியிட்டிருந்த அவர், மஹிந்தவை…

Read More

கடந்த 5 நாட்களில் 399 விபத்துகள் – சராசரியாக தினமும் 10 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 5 நாட்களில் 399 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 52 பேர் மரணமடைந்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி முற்பகல் 6.00 மணி முதல் இன்று (18) முற்பகல் 6.00 மணி வரையான காலப் பகுதியில் இவ்விபத்துகள் மற்றும் மரணங்கள் பதிவாகியுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார். அதற்கமைய சராசரியாக 10 பேர் தினமும் மரணமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், கவனயீனம், பாதுகாப்பற்ற…

Read More

துறைமுக நகரத்தின் முழு நிலப்பரப்பும் இலங்கைக்கே சொந்தமானது,கோட்டா அரசு நாட்டுக்கு பாதகமாக ஒரு போதும் செயற்படாது..!

கொழும்பு, துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் தொடர்பில் போலியான பிரசாரங்களை எதிர்தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். துறைமுக நகரத்தின் முழுமையான நிலப்பரப்பும் இலங்கைக்கே சொந்தமானது. ஆகவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் நாட்டுக்கு பாதகமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காதென்ற உறுதிமொழியை வழங்குவதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முழு உலகப் பொருளாதாரமும் கடுமையான வீழ்ச்சிக்கண்டுள்ள சூழலில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் ஓர் உபாய மார்க்கமாகவே கொழும்பு துறைமுக நகரத்தை பயன்படுத்த எதிர்பார்க்கிறோம். நாட்டின் பொருளாதாரம்…

Read More

கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவாக இலங்கையில் சில மரணங்கள்..!

ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ரா – சோனிகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்க விளைவாக இலங்கையில் சில மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மருத்துவ ஆய்வுக் கூட ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுவது சம்பந்தமாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில், இதன் காரணமாக உலகில் பல நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இது குறித்து இலங்கையும் கவனம்…

Read More

முன்வினையின் பயனையே விஜயதாஸ ராஜபக்ஷ அனுபவிக்கிறார், நாம் கவலை கொள்ளத் தேவையில்லை..!

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜக்க்ஷவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அச்சுறுத்தியதாக குறிப்பிடப்படும் விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். முன்வினையின் பயனையே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தற்போது அனுபவிக்கிறார் எனவும் இவர் நல்லாட்சி அரசாங்கத்தில் நீதியமைச்சர் பதவி வகித்துக்கொண்டு ராஜபக்க்ஷர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர பொருளாதார…

Read More

கொழும்பு துறைமுகம் சீன பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்காது என அரசாங்கம் அறிவிப்பு..!

கொழும்பு துறைமுகம் சீன பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகரின் சட்டம் ஒழுங்கு நிலைமையை பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை பொலிஸாரிடமே காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுக நகர் சீன காலணி எனவும் சீன பொலிஸாரினால் நிர்வாகம் செய்யப்படும் எனவும் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்திற்கும் இலங்கையின் சட்ட திட்டங்களே அமுல்படுத்தப்படும்…

Read More

பசிலுக்கு ஆதரவளிக்கும் சுமந்திரனை கட்சியைவிட்டு நீக்குமாறு சம்மந்தனுக்கு கடிதம்..!

கட்சியில் நான் இணைக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான உங்களிடம் ஒரு போதும் எந்தவிதமான வேண்டுகோள்களையும் நான் முன்வைத்தவனல்ல, முன்வைக்கப் போறவனுமல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் மேலும், ஆனால் தமிழ்த் தேசியத்தின் வலிமையான இருப்பின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு கீழ் காணும் வேண்டுகோள்களை முதலாவதும் இறுதியுமான வேண்டுகோள்களாக முன்வைக்கின்றேன்….

Read More

கட்டாரில் அதிகரிக்கும் இலங்கையர்களின் மரணம்..! நடப்பது என்ன..?

அன்பான கத்தார் வாழ் இலங்கை சகோதர-சகோதரிகளே கொஞ்சம் சிந்தியுங்கள்! கடந்த 2 மாதங்களாக பல ஜனாஸாக்களை, அடக்கம் செய்துவிட்டு எழுதுகிறோம்.  நாம் பல தேவைகளின் நிமித்தம் சொந்தநாட்டில் இருந்து கத்தாரில் பல கஷ்டங்கள் சிரமங்களுக்கு மத்தியில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். குடும்பத் தேவைகளுக்காக குடும்பத்தை பிரிந்து வாழும் நமது வருகையை எதிர்பார்த்து நமது தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்… etc என எல்லோரும் நமக்காக காத்திருக்கிறார்கள்.  இந்நிலையில் நாம் மரணித்த செய்தி அவர்களின் காதுகளுக்கு…

Read More

அரசின் பங்காளிக் கட்சிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை..!

ஆளும் கட்சியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று நாளை (19) இடம்பெறவுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அலரி மாளிகையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தல் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சியின் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இந்த கூட்டத்தின் போது எதிர்ப்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சட்டத்தின் சில சரத்துகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒரு நிலைப்பாட்டினையும், ஏனைய கட்சிகள் வேறு நிலைப்பாட்டினையும்…

Read More

LTTE அமைப்பை பிரபலப்படுத்த பிரச்சாரம் செய்த ஐவர் கைது..!

விடுதலைப் புலிகள் அமைப்பை பிரபலப்படுத்துவதற்கான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பின்னணியில் ஐவரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் சரத் வீரசேகர. யாழ் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த நபர்களே பயங்கரவாத தடுப்பு பிரவினரின் விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உறுதியாக செய்து கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

யுவான் வந்தால் டொலர் இறங்கும், ஷெஹான் விளக்கம்..!

சீனாவின் பணம் இலங்கைக்குள் வருவதால் டொலருக்கு எதிரான பெறுமதியும் அதிகரித்திருப்பதாகவும் இதை விளங்கிக் கொள்ளாமல் சீன கரன்சி இலங்கைக்குள் வருவது தொடர்பில் அரசியல்வாதிகள் புலம்புவதாகவும் தெரிவிக்கிறார் ஷெஹான் சேமசிங்க. சீனாவினால் வழங்கப்படும் கடன் தொகையால் 205 ரூபா வரை ஏறியிருந்த டொலருக்கு எதிரான பெறுமானம் தற்போது 195 ரூபாவாக குறைந்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். துறைமுக நகரம் தனி நாடாக இயங்கப் போவதாகவும் அதற்காக சீனா பணத்தைக் கொட்டுவதாகவும் விஜேதாச ராஜபக்ச விசனம் வெளியிட்டிருந்ததற்கு பதிலளிக்கு முகமாகவே ஷெஹான்…

Read More

போர்ட் சிட்டி; கோட்டாவை சந்திக்கிறது அஸ்கிரியப் பீடம்

சர்ச்சைக்குரிய போர்ட் சிட்டி திட்டத்தின் ஆணைக்குழு அமைப்பைகற்கான சட்டமூலம் குறித்து அஸ்கிரியப் பீடம், ஜனாதிபதியிடம் விளக்கம் கோரவுள்ளது. அஸ்கிரியப் பீடத்தின் பிரதான பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த போது இதனைக் கூறியுள்ளார்.

Read More

வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை..!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோரின் எண்ணிக்கையை குறைப்பது அல்லது வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்வதில் ஆராயப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பல வெளிநாடுகளில் கொரோனா மூன்றாவது அலை மற்றும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையை அவதானித்து இவ்வாறு கட்டுப்பாடுகள் அவசியப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையிலும் கடந்த சில தினங்களாக தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More