
சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள்
சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது இலக்காகும். நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 59 விளையாட்டு வீரர்கள் தொழில் ரீதியில் ஒப்பந்தங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். மஹேல ஜெயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் மூலம்…