இந்தியாவிலிருந்து ஹொங்கொங் வந்த 49 பயணிகளுக்கு கொரோனா

புதுடில்லியில் இருந்து ஹொங்கொங் சென்ற விமானத்தில் இருந்தவர்களில், குறைந்தது 49 பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸ் தொற்று உறுதியான அனைவரும், இம்மாதம் நாலாம் திகதி இந்தியாவைச் சேர்ந்த விஸ்தாரா நிறுவனத்தின் விமானத்தில் ஹொங்கொங் சென்றவர்கள். ஹொங்கொங்கில் அன்றாடம் பதிவாகும் வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை, விமானப் பயணிகளிடையே உறுதியான எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவு. எனவே, 49 என்பது ஹொங்கொங்கிற்குக் கணிசமான எண்ணிக்கை என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சம்பவத்தில் தொடர்புடைய…

Read More

சீன அணுவாயுத கப்பல் – வெளியேறும்படி இலங்கை உத்தரவு

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அணு ஆயுத திரவியங்களைக் கொண்ட வெளிநாட்டுக் கப்பலொன்று வந்துள்ளமை பற்றிய தகவல் குறித்து உண்மை நிலைவரத்தை தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரையொன்றை ஆற்றியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார். அணுவாயுத அதிகார சபையின் அனுமதியின்னறி நேற்றைய தினத்தில் இவ்வாறான கப்பல் வருகை தந்திருப்பதாகவும், குறைந்த பட்சம் அந்தக் கப்பல் பரிசோதனைக்குக்கூட உட்படுத்தப்படவில்லை என்றும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார். அதற்கமைய உடனடியாக விசாரணை நடத்தி…

Read More

இளைஞர்களின் போராட்டம் வென்றது : அரசியல்வாதிகளின் முகத்தில் காரி உமிழ்ந்த சம்பவம் சம்மாந்துறையில் பதிவானது..!

இடமாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்க நடவடிக்கை எடுக்க கோரி சம்மாந்துறை இளைஞர்கள் கடந்த சில தினக்களுக்கு முன் அந்த சாலைக்கு அண்மையில் திரண்டு 09 நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன் பிற்பாடு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் அடங்கிய…

Read More

முஷர்ரப், தன் தூய்மையை நிரூபிக்க ஹரீஸுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவாரா…?

பா.உ முஷர்ரபின் நாடகம் வெளிப்பட்ட புள்ளி 20ம் அரசியலமைப்பு சீர் திருத்தத்தின் போதாகும் என்றால் தவறாகாது. அவர் 20ஐ ஆதரித்தாரா, இல்லையா என்பதையே ஒரு விவாத பொருளாக மாற்றியிருந்தார். நீங்கள் இருபதுக்கு ஆதரவளித்தீர்களா என யாராவது கேட்டால், சில இடங்களில் ” ஆம் “ என்ற பதிலையும், வேறு சில இடங்களில் ” இல்லை “ என்ற பதிலையும் சந்தர்ப்பத்தை பார்த்து கூறி வருகிறார். இதனை பார்க்கின்ற போது ” திரிஷா உனக்கு தான்டா “ என்ற…

Read More

குண்டுத் தாக்குதல் தாமதமடைவதால் “பொஸ்” கவலை என்ற உரையாடலில் உள்ள பொஸ் யார்..!

உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் பாணந்துறை , ஜா எல பிரதேசங்களிலுள்ள பாதுகாப்பு இல்லங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்களில் தாக்குதலை காலம் தாழ்த்துவதால் பொஸ் கவலையில் இருக்கிறார் உடனடியாக இதனை செய்ய வேண்டுமென்று பொஸ் கூறுகின்றார் என கூறப்பட்டுள்ளதாக எவ்.பி ஏ விசாரணைகள் மூலம் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படியானால் அந்த பொஸ் யார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷநாணயக்கார சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More

இலங்கையில் இளம் வயதினருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு..!

இலங்கையில் இளம் வயதினருக்குக் கொவிட் -19 வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஊடகங்களிடம் தெரிவித்தார். நாட்டில் தினசரி கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். கொவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார். இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச்…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதி நிலைநாட்டப்படும் – பிரதமர் உறுதியளிப்பு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அஞ்சலி செலுத்தினார். இந்த அஞ்சலி நிகழ்வு அலரிமாளிகையில் இன்று காலை 8.45 மணிக்கு நடைபெற்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் எனவும், இவ்வாறான தாக்குதல்கள் எதிர்காலங்களில் நடைபெறாதிருக்கும் வகையில் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே இதனைத்  தெரிவித்துள்ளார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில், இத்தால் ஈராண்டுகளுக்கு முன்னர் அதாவது 2019 ஏப்ரல் 21…

Read More

முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் எமக்கு ஒரு முகமும் அரசுக்கு ஒரு முகமும் காட்டுகின்றார்கள்..!

தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை. சில முஸ்லிம் அரசியல்வாதிகள் எமக்கு ஒரு முகமும் அரசுக்கு ஒரு முகமும் காட்டும் செயற்பாடுகளையே மேற்கொள்கின்றார்கள். இந்நிலை எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத நிலைமையே ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

Read More

மன்னர் சல்மானின் ரமழான் அன்பளிப்பு 21 மொழிகளில், 10 இலட்சம் அல் குர்ஆன் பிரதிகள் 28 நாடுகளுக்கு விநியோகம்..!

இரண்டு புனித இறையில்லங்களின் பராமரிப்பாளரான சவூதி அரேபிய மன்னரின் ரமலான் அன்பளிப்பாக 21 வெவ்வேறு மொழிகளில் அச்சிடப்பட்ட பத்து லட்சம் திருக்குர்ஆன் பிரதிகள் 28 நாடுகளில் விநியோகம் செய்யப்படவிருக்கிறது. சவூதி அரேபியா இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அழைப்பியல் துறை அமைச்சர் டாக்டர் அப்துல் லத்தீப் பின் அப்துல் அஸீஸ் மேற்பார்வையில் மதினா King Fahad Glorious Quran Complex ல் அச்சிடப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகள் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் வழி விநியோகம் செய்யப்பட கப்பல் மூலம் கண்டெய்னரில்…

Read More

மாகாண சபைத் தேர்தலில் தொகுதி ஒன்றுக்கு கட்சி ஒன்றில் மூன்றுபேரை நிறுத்த ஆளும் கட்சி இணக்கம்..!

மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்தும் யோசனைக்கு, ஆளும்கட்சி நாடாளுமன்றக் குழுவின் ஏகமனதாக இணக்கம் வெளியிட்டுள்ளது.   ஆளும்கட்சியின் நாடாளுமன்ற குழு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியபோதே, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். தொகுதி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்தி, அவர்களில் மக்களின் ஆதரவை அதிகம் பெறும் நபருக்கு, அந்த தொகுதியின் உறுப்பினராவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டது. குறித்த…

Read More

உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளுக்கு மன்னிப்பு வழங்கத் தயார் – கர்தினால் அறிவிப்பு..!

உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயார் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலின்இரண்டாமாண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தாம் சூத்திரதாரிகளுக்கு மன்னிப்பு வழங்கத் தயார் என்ற போதிலும், குறித்த குற்றத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் யார் என்பதே பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் மற்றும் தற்போதுள்ள அரசாங்கம் நடத்திய விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை…

Read More

கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்யுங்கள் – ஆளும் கட்சி பெண் Mp அரசுக்கு ‘அட்வைஸ்..!

மதுபானசாலைகளை அதிகாலை ஒருமணிவரை திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டுமென ஆளுங்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோது அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில், கஞ்சா வளர்ப்பினை சட்டரீதியாக அனுமதிக்க வேண்டும். அரச முயற்சியில் அவற்றைப் பயிரிட்டு ஏற்றுமதி செய்யவும் வேண்டும் . அரசாங்கத்தின் அனுசரணையில் கஞ்சா வளர்ப்பு செய்து, அவற்றை ஏற்றுமதி செய்வதன் ஊடாக, அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் நாட்டிலுள்ள மதுபானக் கடைகள் இன்று…

Read More

மீண்டும் தனிமைப்படுத்தும் அபாயத்தில் கொழும்பு?

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் மீண்டும் தனிமைப்படுத்தும் அபாயத்தில் கொழும்பு மாவட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சித்திரைப் புத்தாண்டின் பின்னர் 8 வீதத்தில் அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று 367 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு அவர்களில் 94 பேர் கொழும்பு மாவட்டத்தில் உள்ளவர்கள். இவ்வாறு தொடர்ச்சியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அபாயகரமான பகுதிகளை மீண்டும் தனிமைப்படுத்தவே நேரிடும் என்றும் பொது சுகாதார…

Read More

இலங்கையில் கொரோனா அபாய எச்சரிக்கை ! ICU வில் அதிகரிக்கும் நோயாளிகள் – கடந்த சில தினங்களாக புதிய திரிபுகள் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இதனைத் தெரிவித்துள்ளதோடு, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த சில நாட்களாக இலங்கையில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்படாத கொரோனா வைரஸின் மாறுபட்ட திரிபுகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பான விஞ்ஞான ரீதியான தரவுகளின் ஆய்வு மற்றும் தகவல்களை கண்டறியும் நடவடிக்கைகள்…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் விதமாக இன்று (21) காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலத்தப்பட்டது. கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பங்களிப்புடன் கொச்சிக்கடை தேவலாயத்தில் இந்த நிகழ்வு ஆரம்பித்து கைப்பட்டிருந்து. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டு இன்றுடன் இரண்டு வருங்களை நிறைவை பல்வேறு விஷேட ஆராதனைகளும் இடம்பெற்று வருகின்றது.

Read More

இந்தியாவை நிர்கதியாக்கியுள்ள கொரோனா

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 294,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,09,004 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நாடு முழுவதும் 1,32,69,863 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 21,56,571 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 2020 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு பலியானோர்…

Read More