காரைதீவு, நிந்தவூரில் களமிறங்கிய சுகாதாரத்துறை : விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கையும் தொற்றுப்பரிசோதனையும்.

நூருல் ஹுதா உமர் நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வெள்ளிக்கிழமை (21) நிந்தவூர் பிரதேச வீதியோர வியாபாரிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுகாதார வழிமுறைகளை பேணாதோர், முகக் கவசம் அணியாமல் வீதிகளில் உலாவித்திரிவோருக்கு எதிராக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் தலைமையில் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதே போன்று இன்று கல்முனை பிராந்திய…

Read More

கொரோனா அலைக்கு மத்தியில் மற்றுமொரு சவால் : மக்களை விழிப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது !

நூருல் ஹுதா உமர் எமது நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் இந்த சூழ்நிலையில் மற்றுமொரு சவாலாக டெங்கும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தற்போது மழைகாலம் ஆரம்பித்து இருப்பதனால் டெங்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. எமது வீடுகள், அலுவலகங்கள் அடங்கலாக நீர் தேங்கி நுளம்புகள் பரவும் இடங்களை உடனடியாக சுத்தம் செய்து தங்களையும் தங்களது அயலவர்களையும் பாதுகாத்து கொள்ளுமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி…

Read More

இஸ்ரேல் யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம்..!

பலஸ்தீனம் மீது கடுமையான வான் தாக்குதல்களை நடாத்தி வந்த இஸ்ரேல் யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 21ம் திகதி உள்ளூர் நேரம் அதிகாலை 2 மணியிலிருந்து தாக்குதல்கள் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வாரத்துக்கும் அதிகமான நீடித்த தாக்குதல்களில் 12 இஸ்ரேலியர்களும் ஆகக்குறைந்தது 232 பலஸ்தீனர்களும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

காரைதீவில் நடுநிலையான ஊடகவியலாளர்களை அனுமதிக்காமல் ஜால்றா அடிப்பவருக்கே தவிசாளர் அனுமதி வழங்குகிறார்..!

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கே. குமாரஸ்ரீ குற்றசாட்டு. நூருல் ஹுதா உமர் பிரதேச சபை வாகனத்தை எடுத்துக்கொண்டு பிரதேச சபை எரிபொருளை பயன்படுத்தி சொந்த வேலைகளுக்காக திராய்க்கேணி, வளத்தாப்பிட்டி, மல்வத்தை போன்ற பிரதேசங்களுக்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சென்றுள்ளார். அந்த வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதிக்கு மேலதிக நேர கொடுப்பனவாக 13 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இது யாரின் வரிப்பணம்? மக்கள் எங்களை அனுப்பியது இதை பார்த்துக்கொண்டிருக்கவா? இவற்றை தட்டிக்கேட்டு கணக்காய்வு செய்தால் ஊழியர்களை எனக்கெதிராக திருப்பி…

Read More

இஸ்ரேலில் நடக்கும் யுத்தம் சரியா, தவறா என்பதை நான் கூறப் போவதில்லை – விமல்..!

யுத்தத்தை செய்தது தானே என கூறுவதற்கு இஸ்ரேல் நாட்டில் இராணுவ தளபதிகள் இல்லை என அமைச்சர் விமல் வீரவங்ச கூறியமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதிலளித்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் இன்று -20- சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் குறித்த விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவங்ச, இஸ்ரேலில் யுத்தம் நடப்பதாகவும் அது சரியா, தவறா என்பதை கூற…

Read More

கல்முனையில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவுக்கு தீவைப்பு..!

நூருள் ஹுதா உமர் கல்முனை கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் நேற்று அதிகாலையும் இனம் தெரியாதோரால் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீயிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த முச்சகரவண்டி முற்றாக தீயில் கருகி நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றுறு அதிகாலை 1.30 மணியளவில் நடைபெற்றிருக்க கூடும் என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். உரிமையாளர் இரவில் தன்னுடைய வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது போன்று கடந்த காலங்களிலும் இரு தீவைப்பு சம்பவங்கள் இந்த பிரசேத்தில்…

Read More

சரத் வீரசேகர ஒரு மோசமான மனிதர், கழிவறையை சுத்தம் செய்வதற்குக் கூட தகுதியில்லாதவர் – பொன்சேக்கா..!

என்னை ஒருமையில் விளித்து கருத்து தெரிவித்தமையால், சரத் வீரசேகரவிற்கு மதிப்பளித்து உரையாற்றப்போவது இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் குறித்த விவாதத்தில் இன்று -20-  கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சரத் வீரசேகர ஒரு மோசமான மனிதர், 2010ஆம் ஆண்டு சிவில் பாதுகாப்புப் படையினரை வைத்துக்கொண்டு அம்பாறையில் தேர்தலில் வெற்றிபெற்றார் அதன் பின்னர் 100 காணியை கைப்பற்றி சோளப்பயிர்ச்…

Read More