
ஆளும் கட்சிக்குள் பிளவு – டிலான் பெரேரா தகவல்..!
இலங்கையில் தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்று நெருக்கடியானது, ஆளும் கட்சிக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை இராணுவத்தின் வசமுள்ள கொவிட் தடுப்பு பணிகளை சுகாதாரத் துறைக்கு வழங்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் கடந்த 2020 ஆம் ஆணடு மார்ச் 11ஆம் திகதி கொரோனா தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டதில் இருந்து கொவிட் ஒழிப்பு பணிகளை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வழங்கியிருந்தார்….