யாழ்ப்பாணம் முஹம்மதியா பள்ளிவாசல் நிருவாகிகள், வக்பு சபையினால் இடைநிறுத்தம்..!

யாழ்ப்பாணம் கலீபா அப்துல் காதர் (நாவலர் வீதி) வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும் ஆப் பள்ளிவாயலின் தலைவர் உட்பட அனைத்து நிருவாகிகளையும், பொறுப்புதாரிகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் செய்து விஷேட நிருவாக குழுவொன்றை நியமனம் செய்வதற்கு இலங்கை வக்பு சபை தீர்மாணித்துள்ளது. இப்பள்ளிவாயலில் கடந்த 04/06/2021 வெள்ளிக்கிழமை கொவிட் 19 பயணிக் கட்டுப்பாடுகளை மீறி தலைவர் உட்பட 14 நபர்கள் பள்ளிவாயலில் ஒன்று கூடி இருந்தமையின் காரணமாக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையினரால் தனிமைப்படுத்தலுக்கு…

Read More

நாளை பாராளுமன்றம் கூடுகிறது..!

நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வுக்கு கட்சித் தலைவர்கள் மட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இப்பின்னணியில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் காலையில் கட்சித் தலைவர்கள் கூடிக் கலந்துரையாடியதன் பின்னணியில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் தரப்பு விளக்கமளித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கும் செயற்பாடுகளை அரசு முடுக்கி விட்டுள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருபவர்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர் தனிமைப்படுதல் தொடர்பிலான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது சுகாதார அமைச்சு. இதனடிப்படையில் இரு தடுப்பூசிகளையும் ஏலவே பெற்றுள்ள இலங்கைப் பிரஜைகள் மற்றும் இலங்கைக் குடியுரிமையுள்ள இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் நேரடியாக தமது வீடுகளிலேயே 14 தினங்கள் தனிமைப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லாதவர்கள் 14 நாட்கள் முகாம்களில் அல்லது ஹோட்டல்களில் தனிமைப்பட வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியா – வியட்நாம் – தென்னாபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளிலிருந்து வரும் இலங்கையர் கட்டாயம் முகாம்களில் அல்லது ஹோட்டல்களில் தனிமைப்பட…

Read More

பொது மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான அறிவித்தல்கள் காட்சிப்படுத்தல்..!

மாளிகைக்காடு நிருபர் பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான முன் ஏற்பாடுகளுக்கான விளம்பர சுவரொட்டிகள் மற்றும் அறிவித்தல்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பொது மக்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று…

Read More

ஆபத்தான நிலையில் திருகோணமலை, 24 மணித்தியாலத்தில் 7 பேர் மரணம்..!

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கொரோனாவால் 7 மரணங்கள் பதிவாகி உள்ளன. குறிஞ்சாங்கேணி பகுதியில் ஐவரும், கிண்ணியா மற்றும் திருகோணமலை பகுதிகளில் தலா இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 29 ஆண்களும் 23 பெண்களும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியமை தெரியவருகின்றது. இதனடிப்படையில் திருகோணமலை…

Read More