சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அமைச்சர் கமன்பிலாவின் பதில்..!

பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் கையெழுத்திட்ட கடிதத்திற்கு பதிலளிக்க அமைச்சர் உதய கம்மன்பிலா தயாராகி வருகிறார். சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறும் என்று அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Read More

கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை..!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசல் அவர்களின் தலைமையில் இன்று இரவு ஒலிபெருக்கியில் கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை சாய்ந்தமருதில் இடம்பெற்றது. இந்த தடுப்பூசியானது முதற்கட்டமாக 60 வயதை தாண்டியவர்கள் மற்றும் பொது மக்களுடன் கள நேரடி தொர்பினை வைத்திருக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக…

Read More

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவாரா கம்மன்பில..?

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உணவைக்கூட முறையாக உண்ண வழியின்றி பலர் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில் திடீரென நேற்றிரவு எரி பொருட்களின் விலை அதிகரித்தது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான கையோடு அடுத்துவரும் நாட்களில் ஏனைய சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயரக்கூடும் என்பதை மக்கள் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டனர். இதனால் எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அதனை மீளப்பெறுமாறும்…

Read More

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்காதே என பிரிட்டனில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம்..!

கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து பிரிட்டனின் கார்ன்வாலில் உலகத் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் ஜி7 மாநாடு தொடங்கியது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும்,  ஜி 7 நாடுகளின் இராணுவ ஒத்துழைப்புக்கு எதிராகவும், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பதை நிறுத்தக் கோரியும் லண்டனில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள்   இன்று  12.06.2021 சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதை காண்கிறீர்கள்.

Read More

நாடு முழுவதும் சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் குவிப்பு..!

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக நாடு முழுவதும் சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மீறப்படும் இடங்கள் குறித்து காவல்துறை உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது இந்த குழுக்களின் பொறுப்பு என்று ராணுவ தளபதி மேலும் தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் பலரின் நடத்தை திருப்திகரமாக இருப்பதாக அவர் கூறுகிறார், ஆனால் சிலரின் நடத்தை வருந்தத்தக்கது. அத்தியாவசிய தேவைகளைத்…

Read More

முன்வரிசையில் அநுரகுமாரவுக்கு பக்கத்தில், ரணிலுக்கு ஆசனம்..!

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 22 ஆம் திகதியன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பொதுத் ​தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப் பட்டியல் கிடைத்தது. அப்பட்டியல் நிரப்பப்படாமலே இருந்தது. இந்நிலையிலே​யே, கட்சியின் தலைவ​ரையே நியமிப்பதற்கு செயற்குழு கடந்தவாரம் தீர்மானித்திருந்தது. அதனடிப்படையிலேயே, எதிர்வரும் 22ஆம் திகதியன்று அவர், சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். அவருக்கு எதிரணியில் முன்வரிசையில் ஆசனத்தை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. பாராளுமன்றத்துக்கு…

Read More

400 பில்லியனை மக்களிடம் கொள்ளையடித்த அரசாங்கம் – ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்..!

அரசாங்கம் சுமார் 400 பில்லியன் ரூபாவை மக்களிடமிருந்து கொள்ளையடித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்தமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். 2018ம் ஆண்டு தான் அறிமுகம் செய்த எரிபொருள் சூத்திரம் நடைமுறையில் இருந்தால் மக்கள் இன்று அதன் நன்மையை பெற்றிருப்பர் என மங்கள சுட்டிக்காட்டியுள்ளார். 63.19 டொலராக இருந்த மசகு எண்ணெய் கொவிட்…

Read More

சஜித்துக்கு முட்டுக்கட்டையாகும் ஜே.ஆரின் மேட்டுக்குடி வாதம்..?

-சுஐப் எம். காசிம்- நாட்டில், அரைநூற்றாண்டு அனுபவம் உள்ள ஐக்கிய தேசிய கட்சி, பாராளுமன்றத்தில் இல்லாத குறையை ரணிலின் வருகை போக்கவுள்ளது. நாட்டின் முதற் பிரதமர் உட்பட பல பிரதமர்களையும், இரண்டு ஜனாதிபதிகளையும் ஆட்சியில் அமர்த்திய கட்சி இது. இன்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எந்த ஆசனமும் இல்லாமல், தேசியப்பட்டியலில் கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை வைத்துக்கொண்டு, ஆயுளை விடுமளவுக்கு வீழ்ந்து கிடக்கிறது. கடந்த வருடம் ஓகஸ்ட்17 இல் நடந்த பொதுத்தேர்தலில் இக்கட்சிக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு, ரணிலை ஒதுங்கிவிடுமாறு…

Read More

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார்..!

நூருல் ஹுதா உமர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரி பாலசிரிசேன, மொறகஹகந்த நீர்த்தேக்க திட்டம், ஆசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலைத்திட்டம் ஆகிய இரு அபிவிருத்தி திட்டங்கள் மூலமாகவும் அரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமை, ரணிலை பிரதமர் கதிரையிலிருந்து அகற்றியமை, மத்தியவங்கி ஊழல் ஆணைக்குழுவை அமைத்தமை போன்ற அதிரடி அரசியல் நடவடிக்கைகள் மூலமாக அரசியல் அரங்கில் அழியாத தடம் பதித்தவர் என கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் தொடர்பில் இன்று (12) அவர்…

Read More

சம்மாந்துறையில் வெடிப்புச் சம்பவம்: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்..!

(செ.தேன்மொழி) அம்பாறை – சம்மாந்துறை பகுதியின் வளத்தாபிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான வடித்தலில்போது பீப்பாய் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் நேற்று (12) வெள்ளிக்கிழமை அதிகாலை, சட்டவிரோதமான மதுபான வடித்தலின்போது, பீப்பாய் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னுமொருவர் காயமடைந்திருந்தார். இதன்போது ஏகாம்பரம் தங்கவேல் எனப்படும் நபர் உயிரிழந்துள்ளதுடன்,…

Read More

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னரே எச்சரித்த பாகிஸ்தான்..!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் இலங்கைக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தானிய உளவுப் பிரிவினர் இந்த தாக்குதல் முயற்சி தொடர்பில் முன்கூட்டியே இலங்கைக்கு தகவல் வழங்கியிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தொலைதொடர்பு வலையமைப்பினை ஒட்டுக் கேட்டதன் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தது என குறி;ப்பிடப்படுகின்றது. இலங்கை தொடாபில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பேசிக்…

Read More

பொது மக்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் சாய்ந்தமருதில் ஆரம்பம்..!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்குவதற்கான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு, தெரிவுசெய்யப்பட்ட உரிய பாடசாலை அதிபர்களுடன் தடுப்பூசியினை பொதுமக்களுக்கு வழங்குவது தொடர்பான திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. எதிர்வரும் தினங்களில் சாய்ந்தமருது பிரதேச பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உரிய கிராம சேவகர்…

Read More

நாட்டில் சிறுமி ஒருவர் அச்சமின்றி வெளியே செல்ல முடியாத சூழல், இதனை எண்ணி நாம் வெட்கமடைய வேண்டும்..!

(செ.தேன்மொழி) மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பாகும். இதற்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள ‘மிஹிஜய செவண’ தொடர்மாடி குடியிருப்பில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலைய கட்டடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்காகவே பொதுமக்கள்…

Read More