கொரோனா காலத்திலும் டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க களச் செயற்பாடும் புகை விசிறல் நடவடிக்கையும்..!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம்.பைசல் தலைமையில் டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க களச் செயற்பாடுகளும் புகை விசிறல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக டெங்கு நுளம்பின் ஆதிக்கம் சமிக்கை காட்டி வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கும் வகையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களால் நாளாந்தம் களச் செயற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஒரு டெங்கு…

Read More

நாட்டைக் காப்பாற்றும் ‘முறை’ தெரியும்: பவித்ரா வன்னியாராச்சி..!

கொரோனா முதலாம் மற்றும் இரண்டாம் அலையின் போது நாட்டைக் காப்பாற்றியது போன்று மூன்றாவது அலையின் போதும் நாட்டைக் காப்பாற்றும் முறை அரசுக்குத் தெரியும் என்கிறார் பவித்ரா வன்னியாராச்சி. கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் வர்த்தக நிலையங்கள் மீது அபராதம் விதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர், சுகாதாரத்துறையினர் இன்னும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என தெரிவிக்கிறார். எனினும், இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய ரணில், நாட்டின்…

Read More

ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்காது போனாலும் மாற்று வழியில் எதிர்கொள்ள தயார் – அஜித் நிவாட் கப்ரால்..!

ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை இராஜதந்திர ரீதியில் மேற்கொண்டு வருவதாக  நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் விவாதத்தின் போதே இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஜிஎஸ்பி வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக நாட்டை கொள்கை ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை, இருப்பினும் சில வேளை இது கிடைக்காமற் போனால் அதனை…

Read More

மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை..!

மரண தண்டனை கைதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்றைய தினம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. துமிந்த சில்வாவை விடுதலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணியின் தகவலை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பொசன் போயா தினத்தை முன்னிட்டு 16 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களும் 77 சாதாரண கைதிகளும் ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாரத…

Read More