வெள்ளிடைமலையாகி வரும் கைதிகளின் விடுதலைகள்..!

-சுஐப் எம். காசிம்- ஏதாவதொரு முக்கிய தினத்தில், எவருக்காவது விடுதலை கிடைக்கும் அரசியல் கலாசாரம் இருப்பதுதான், பயங்கரவாதத் தடைச்சட்டம் ஒழிக்கப்படும் வரைக்கும் கைதிகளுக்குள்ள ஒரேயொரு ஆறுதல். சுதந்திர தினம், பொஸன் போயா தினம் மற்றும் விஷேட தினங்களிலாவது, சிலர் பொதுமன்னிப்பில் விடுதலையாகாதிருந்தால், நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்திருக்கலாம். இவ்வாறுதான் சில நடைமுறைகளும் உள்ளன. இப்போது, இதிலொரு தினத்தில்தான் 93 கைதிகள் விடுதலையாகி உள்ளனர். இவர்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் கைது செய்யப்பட்ட 16 தமிழ் அரசியல்…

Read More

பசில் ராஜபக்ஷா எம்.பி ஆவதில் சட்ட சிக்கல் உண்டா..?

தேசியப்பட்டியலில் பெயரில்லாத, மாவட்டப் பட்டியலில் பெயரில்லாத ஒருவர் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசம் செய்வதானது அரசியலமைப்புக்கு முரண் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஷில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில், அவர் தனது கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் உறுப்புரிமை ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசம் செய்யவுள்ளதாகவும், அதற்குரிய இறுதிக்கட்ட கலந்துரையாடல்களை ஆரம்பித்திருப்பதாகவும் ஆளும் தரப்பின் பல்வேறு…

Read More

மைத்திரியின் புதிய வியூகம், கூட்டிணையும் விமல், கம்மன்பில..!

முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட்டணி அமைப்பதற்கான முதற்கட்டப் பேச்சினை நடத்தியுள்ளதாக அறியமுடிகின்றது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தச் சந்திப்பானது சூம் ஊடாக நடத்தப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவும் கலந்துகொண்டிருப்பதாக மைத்திரியின் நெருக்கமான இடத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு இந்த மூவரும் இணக்கம் வெளியிட்டிருக்கின்றனர். அடுத்தகட்டப் பேச்சில் மேலும் பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்…

Read More

ஊடக நிறுவனங்களில் ”பெண்களுக்கு பாலியல் தொல்லை” அம்பலமாகும் சம்பவங்கள்..!

இலங்கையில் உள்ள முக்கிய ஊடக நிறுவனங்களில் பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ள விடயம் சமூக ஊடகங்களில் கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணைகளை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஊடகத்துறை அமைச்சரும் தெரிவித்திருந்தார்.இந்த வெளிப்பாடுகளில் பெரும்பாலும் அரச ஊடகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  இது தொடர்பாக தனக்கு இதுவரை உத்தியோகபூர்வ முறைப்பாடு எனவும் கிடைக்கவில்லை என, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார். இதுபோன்ற…

Read More

இது இரண்­டா­வது சஹ்­ரானின் வரு­கையோ என எனக்கு சந்­தே­க­மாக உள்­ளது – முகுது மகா­வி­காரதி­பதி..!

(ஏ.ஆர்.ஏ.பரீல்) கிழக்கு மாகா­ணத்தில் தொல்­பொருள் சின்­னங்கள் உள்­ள­டங்­கிய காணி­களை கைய­கப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக இனந்­தெ­ரி­யாத சக்­திகள் செயற்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான காணி­களை இச் சக்­தி­க­ளி­ட­மி­ருந்து பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக நிரந்­த­ர­மான திட்­ட­மொன்று வகுக்­கப்­பட வேண்­டு­மென முகுது மகா­வி­காரை அதி­பதி வர­கா­பொல இந்­திர சிறி தேரர் தெரி­வித்தார். கிழக்கு மாகா­ணத்தில் அழிக்­கப்­பட்டு வரும் தொல்­பொருள் பிர­தே­சங்கள் குறித்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘அருகம் குடா கரை­யோ­ரத்தில் உள்ள வன­பா­து­காப்பு திணைக்­களம் மற்றும்  கரை­யோர…

Read More

சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரினால் மஜ்மா நகரில் நிவாரணப்பணி..!

நூருள் ஹுதா உமர் சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தினரினால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உலருணவுகள் பல இடங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக கொரோணா ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் ஓட்டமாவடி மஜ்மா நகரில் அமைந்துள்ள வீட்டுத்திட்ட மக்களுக்கு நிவாரணம் இன்று பகல் வழங்கி வைக்கப்பட்டது. சாய்ந்தமருது முபாரக் டெக்ஸ் குழுமத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எஸ்.எம். முபாரக் தலைமையிலான குழுவினர் அந்த இடத்திற்கு நேரடியாக சென்று மக்களுக்கான உலருணவுகளை வழங்கி வைத்ததுடன் இனிவரும் காலங்களில் ஏனைய…

Read More

நான் எந்தத் தவறும் செய்யவில்லை, நேர்மையான கடின உழைப்பாளி – அல் ஜசீராவிடம் ஷானி அபேசேகர தெரிவிப்பு..!

தான் எந்த தவறையும் செய்யவில்லை என்றும், உண்மை வெளியாகும் என்றும், குற்றப் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார். குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளரான ஷானி அபேசேகர, தொழில் அதிபர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கில், முன்னாள் துணை காவல்துறை கண்காணிப்பாளர் வாஸ் குணவர்தன, அவரது மகன் மற்றும் நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் பொய்யான சாட்சிகளை முன்னிலைப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவர் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டார்….

Read More

துமிந்த சில்வாவின் விடுதலையால் எனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – ஹிருணிகா தெரிவிப்பு..!

துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். தனது தந்தையின் கொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக நானும் எனது குடும்பத்தவர்களும் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டோம் என ஹிருணிகா பிசிசிக்கு தெரிவித்துள்ளார். தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காக நாங்கள் நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டோம்,ஆனால் ஜனாதிபதி தற்போது அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கியுள்ளார்- மக்கள் நீதித்துறையை எப்படி நம்பமுடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள்…

Read More

மட்டக்களப்பு சிறைச்சாலையினால்  திருப்பெருந்துரை பகுதியில்  வளமான சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு எனும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ..!

எப்.முபாரக்  விவசாய அமைச்சும், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு  இராஜங்க அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் திருப்பெருந்துரையில் வளமான சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு எனும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று(26) சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜங்க அமைச்சர் லொகான் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான திருப்பெருந்துரையிலுள்ள இருபது ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணியில் வளமான சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு சேதனப்பசளை உற்பத்தி மற்றும் காய்கறி உற்பத்திகளை…

Read More

சீனி இறக்குமதிக்கு தடை விதிப்பு..!

இம்மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனி இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி எஸ்.கருணாரத்ன தெரிவித்தார். இதன்படி தற்போதைக்கு இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ள கப்பலில் ஏற்றப்படாத சீனியை இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காணப்படும் சீனி தொகை 40 இறக்குமதியாளர்களிடம் இருந்து 200,000 டொன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் தேவையான அளவு சீனி இருப்பதால் இறக்குதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் ஊடாக டொலர் பெறுமதியை…

Read More

அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் தமிழ் கூட்டமைப்பின் முதுகென்பில்லாத ஆளுமையற்ற தனம் வெளியாகியுள்ளது..!

நூருல் ஹுதா உமர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதுகென்பில்லாத ஆளுமையற்ற தனம் வெளியாகியுள்ளது. கடந்த நல்லாட்சி  காலத்தில் கடும் பலம் பொருந்திய சக்தியாக அந்த அரசாங்கத்தில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் விடுதலை செய்ய முடியாமல் போன தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தை ஆளுமையும் மனிதாபிமானமும் உள்ள ஜனாதிபதி கோத்தாபய அரசு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு முஸ்லிம் பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச…

Read More

கொழும்பு ​அரசியலை அதிரச்செய்யும், அதிரடி முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளி வருமா..?

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கும் அதன் பங்காளிக் கட்சிகள் சிலவற்றுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடுகள் நீண்டுகொண்டே செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்காளிகள் சில தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் உடும்புப்பிடியாக இருப்பதால் மாற்று வழியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஆலோசித்துள்ளனர் என அறியமுடிகின்றது. அதன் முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிய விடுமுறையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ஷ நேற்று…

Read More