அரசியல் கைதிகள் விடுதலையில் சுதாகரனை விடுதலை செய்யாதமை ஏமாற்றமாக உள்ளது : அரசின் பங்காளி கட்சியான இலங்கை மக்கள் தேசிய கட்சி கவலை..!

நூருல் ஹுதா உமர் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுஜன கூட்டணியில் நாற்பது கட்சிகள் இணைந்து ஒப்பந்தம் செய்திருந்தோம். அப்போது எங்களுடன் சிறந்த புரிந்துணர்வுடன் நடந்து கொண்டவரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஸ அவர்கள். அந்த காலப்பகுதியில் எங்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தினோம். அது இப்போது சாத்தியமாகியுள்ளது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஸ சிறந்த நிர்வாகி அவர் விரைவில் பாராளுமன்ற உறுப்பினராக மாறி அதனுடாக அமைச்சு…

Read More

A/L பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும் – கல்வி அமைச்சு..!

இம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Read More

13 நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கை வருவதற்குத் தடை..!

மத்திய கிழக்கு நாடுகளான கட்டார், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரெய்ன் மற்றும் குவைட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கைக்கு சமூகமளிப்பது ஜுலை 1 ஆம் திகதி முதல் ஜுலை 13 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொவிட்–19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணி அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகை தந்த 100 பேருக்கு ஒரே நாளில் கொவிட்-19 தொற்று காணப்பட்டமை இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை…

Read More

இலங்கை கிரிக்கெட்டை மீளமைக்க முடியாவிடின் அமைச்சர் நாமலை இராஜினாமா செய்யுமாறு தேரர் கோரிக்கை..!

இலங்கை கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாவிடின் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யுமாறு ராஜாங்கனே சத்தா ரதன தேரர், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அரசியல்மயப்பட்டுள்ளதால், நாட்டில் காணப்படும் திறமையான விளையாட்டு வீரர்கள் கண்டறியமுடியாதுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில், இரசிகர்கள் மற்றும் முன்னாள் ஜாம்பவான்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தென்னிலங்கையின் ராஜாங்கனே சத்தா ரதன தேரர், தமது ஆதங்கத்தை பேஸ்புக்…

Read More

நாட்டை சரியாக வழிநடாத்த முடியவில்லை எனில் பதவி விலகுங்கள் – சவால் விடுக்கும் சஜித்..!

அரசாங்கத்திற்கு நாட்டு மக்களை பாதுகாத்து நாட்டை நிர்வகிக்க முடியவில்லை எனில், அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராகவுள்ளதாக, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை எனில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு எதிர்க்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி இருந்தார். இந்த உரை தொடர்பில் கருத்து வெளியிடும் போது சஜித் பிரேமதாச இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,…

Read More