அரசியல் கைதிகள் : சந்தர்ப்பம் பார்த்து காய் நகர்த்துகிறதா த.தே.கூ..? நாம்..?

இலங்கை நாடு பல்வேறு சவால்களை முகம் கொடுத்து வருவது நாம் அறிந்ததே. தற்போது பயங்கரவாத தடை சட்டத்தால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கை இழக்குமாக இருந்தால் ஒரு டொலரின் பெறுமானம் 300 ரூபாயை எட்டுமென ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையை அறிந்த த.தே.கூ மிக நேர்த்தியாக காய் நகர்த்துவதாகவே உணர முடிகிறது. அண்மையில் த.தே.கூவுக்கும், ஜனாதிபதி கோத்தாபாயவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று…

Read More

பாணின் விலை 10 ரூபாயால் அதிகரிப்பு..?

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் வாரம் முதல் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். செரன்டிப் நிறுவனம் கடந்த வாரம் முதல் கோதுமை மாவின் விலையை 18 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

Read More

கிழக்கில் சீனர்களுக்கு இடம் கிடையாது – கிழக்கு மாகாண ஆளுநர் திட்டவட்டமாக அறிவிப்பு..!

கிழக்கு மாகாணத்தில் சீனர்களுக்கு இடம் இல்லை என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் நான் விசேடமாக அவதானம் செலுத்தி வருகின்றேன். கிழக்கு மாகாணத்தில் இருக்கிற அனைத்து இடங்களிலும் விவசாயிகள் மீனவர்கள் பாமர மக்கள் அவர்களுடைய பொருளாதாரத்தை வளர்த்து அவர்களை…

Read More

நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது – ஹெகலிய ரம்புக்வெல

நாட்டில் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உணவே கையிருப்பில் உள்ளது என கூறியிருக்கும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, அதற்கு பின்னரான காலம் சவாலானது எனவும் கூறியிருக்கின்றார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பில், நாட்டின் உணவுக் கையிருப்பு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உணவுக் கையிருப்பு தொடர்பாகக் கூறப்படும் விடயங்களில் ஒரு பகுதி சரியாக இருந்தாலும், அமைச்சரவை தொடர்ந்தும் அதுதொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றது. நாட்டின்…

Read More

சந்திரிகா தலைமையில் புதிய கட்சி !

மிகவிரைவில் புதுக்கட்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் அறிவிக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குமார வெல்கம எம்.பி இந்த தகவலை உறுதி செய்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நாடு திரும்பியதும் இந்த அறிவிப்பை வெளியிட காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சந்திரிகா அம்மையாரது மகன் விமுக்தியும் இலங்கை அரசியலில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Read More

ஜூலை 1, இரவு 10 மணி முதல் மருதமுனை முழுமையாக முடக்கப்படுகிறது..

தற்போது மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருதமுனை பிரதேசத்தை நாளை (1) முதல் முழுமையாக முடக்க இன்று (30) பகல் நடைபெற்ற உயர்மட்டக்.கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு முதல் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட்பிரவேசிப்பதும், மருதமுனையில் இருந்து வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன்…

Read More

சட்டத்தின் துணையோடு அஸாத் சாலி விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் : தேசிய ஐக்கிய முன்னணி நம்பிக்கை..!

எல்லாம் வல்ல இறைவன் துணையோடு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி மீண்டும் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்புவார் என்ற உறுதியான நம்பிக்கையில் தொடர்ந்தும் நிலைத்திருக்குமாறும், அதற்கான பிரார்த்தனைகளில் தொடர்ந்தும் ஈடுபடுமாறும் சகல ஆதரவாளர்கள், அபிமானிகள், நண்பர்கள், மற்றும் கட்சித் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தவர்களாக இதனைத் தொடங்குகின்றோம். எமது கட்சித் தலைவர் அஸாத் சாலி எந்தவிதமான நியாயமான காரணமும் இன்றி சுமார் 100 நாற்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கடைசியாக அவர் தொடர்பான அடிப்படை…

Read More

சம்மாந்துறையில் கொரோனா சிகிச்சை விடுதி திறக்கப்பட்டது..!

ஐ.எல்.எம். நாஸிம்,நூருல் ஹுதா உமர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சம்மாந்துறை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கொரோனா நோயாளர்களுக்கான அதி தீவிர கண்காணிப்பு பிரிவும் மற்றும் பிரத்தியேக விடுதியும் இன்று (30) வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனிபா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந் நோயாளர் விடுதி திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் கலந்து கொண்டு விடுதியை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் விசேட…

Read More

கூட்டுக்கட்சிகளுக்குள் முரண்பாடு வருவது உலக அரசியலில் வழமை : மொட்டரசாங்கம் பங்காளி கட்சிகளை பலப்படுத்தினால் மீண்டும் பலமான சக்தியாக மிளிரும்..!

நூருல் ஹுதா உமர் விலையுயர்வு, அரசியல் தலம்பல்கள் என்பன இந்த நாட்டில் வாழும் 70% சிங்கள மக்களையே முதலில் பாதிக்கிறது. அதன் பின்னரே மீதமாக இருக்கும் சிறுபான்மையை பாதிக்கிறது. இதனுடாக சிறுபான்மை மக்கள் தமது பிரச்சினை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் வீழ்த்தப்பட்டால் முதலில் பாதிக்கப்பட போவது சிங்கள மக்கள் தான். கடந்த கால அசம்பாவிதங்களை அது நடக்கும் போது அந்த அரசாங்கங்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. அப்படி ஒரு கொடிய செயலை…

Read More

கிழக்கில் கொரோனா அலை உச்சம் தொடுகிறது : உள்ளூர் மற்றும் பிரதான வீதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் களப்பணியில்..!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க பிரயாணக் கட்டுப்பாடு வரையறை தளர்த்தப்பட்டாலும் கிழக்கில் உக்கிரமடைந்து வரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் உள்ளூர் மற்றும் பிரதான வீதிகளில் களப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. மக்களின் சுகாதார நலன்கருதி சந்தைகள், பொது இடங்கள் மற்றும் பொது வீதிகள் போன்ற இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டு களச் செயற்பாடுகள் நாளந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது….

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..!

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிருந்து வரும் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஜூலை 1 முதல் ஜூலை 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இதற்கு முன்னர்…

Read More

அரசாங்கம் தோல்வியுற்றதன் அறிகுறியே பசிலுக்கான உரிமைகோரல்..!

பசில் ராஜபக்ஷவினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்று கூறுவது ஜனாதிபதி மற்றும் பிரதமர் தோல்வியடைந்துள்ளனர் என்பதே பொருள் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான உரிமைகோரல்கள் ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியுற்றதை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியைக் காரணம் காட்டி கோட்டாபய ராஜபக்ஷ அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவினால் செழிப்பான நாட்டை கொண்டு செல்ல முடியாது கோட்டாபய ராஜபக்ஷவால்…

Read More

நாளையதினம் நாடளாவிய ரீதியில் தாதியர்கள் வேலை நிறுத்தம்..!

நாடளாவிய ரீதியில் அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதியர்கள் நாளையும் நாளை மறுதினமும் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தற்போதுள்ள கொவிட் தொற்று நிலைமை்கு மத்தியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதேவேளை புகையிரத டிக்கெட்டுகளை மின்னணு முறையில் வழங்குவது தொடர்பான வேலைதிட்டத்தை வௌிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் ரயில்சாரதிகள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பஸிலின் உதவி தேவையில்லை – அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை மீளவும் குறைப்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவின் உதவி அவசியமில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றையதினம் இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விலை ஏற்றம் தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள அனைவரும் கவலை அடைந்துள்ளனர். கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம்…

Read More

அஹ்னாப் ஜஸீம் விவகாரம் – மன்றில் ஆஜராகி சி.ரி.ஐ.டி.யும், சட்டத்தரணியும் முன்வைத்த வாதப்பிரதி வாதங்கள்..!

(எம்.எப்.எம்.பஸீர்) நவரசம என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக  கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞரின் விவகாரம் தொடர்பிலான வழக்கில், சி.ரி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். எனினும்  அஹ்னாபுக்கு எதிராக சாட்சிகள் இருப்பின் அவற்றின் சுருக்கத்தை மன்றில்  அவர்கள் முன்வைத்திருக்கவில்லை. எவ்வாறாயினும் அஹ்னாபை  நீதிமன்றில் ஆஜர் செய்த சட்ட பிரிவு தொடர்பில் விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம்  சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு விடுத்திருந்த உத்தரவுக்கு அமைய,…

Read More

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு..!

நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸீம் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளாத்தாப்பிட்டி கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், சமூர்த்தி பெறும் குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்ட 150 பயனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் இடம்பெற்றது. நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கிராமங்களில் உள்ள குடும்பங்களில் நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனை கேட்டறிந்து கொண்ட மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன்…

Read More