
இன்று முதல் பாண், பனிஸ் உட்பட வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கின்றது..!
நாட்டில் உள்ள அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், இன்று முதல் பாண், பணிஸ் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக தொழில்வாய்ப்பு பெரும் பிரச்சினையாக இருக்கும் போது அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த…