
மயிலுக்கு சஜித் தேவையில்லை, சஜிதுக்கே மயில் தேவை..!
அண்மையில் சஜித் அ.இ.ம.கா பற்றி கூறிய கருத்துக்கள் இலேசாக கடந்து செல்ல கூடியதல்ல. அ.இ.ம.காவுக்கும், தங்களுக்குமிடையில் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்ற வகையில் கருத்துரைத்திருந்தார். இரு கட்சிகளும் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை என தெளிவாக கூறியுமிருந்தார். சஜிதுக்காக உழைத்த ஒரு மிக முக்கிய கட்சியை நோக்கி இவ்வாறு அவர் கூறியிருப்பது, சஜிதின் முதிர்ச்சியற்ற, இனவாத, சிலருக்கு கட்டுப்பட்ட அரசியலின் வெளிப்பாடு என்றே கூற தோன்றுகிறது. தற்போது அ.இ.ம.கா மொட்டு அணிக்கு எதிரான அரசியலில் உறுதியாக இருக்கின்றது. இந் நிலையில்…