
மதுபோதையினால் நடக்கக் கூட முடியாத நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை தலைமையகத்துக்குள் நுழைந்ததாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மீது குற்றச்சாட்டு!
(எம்.எப்.எம்.பஸீர்) மதுபோதையில், நண்பர்கள் சிலருடன் வெலிக்கடை சிறைச்சாலை தலைமையகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகள் சிலரை தகாத வார்த்தைகள் கொண்டு ஏசியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராக முறையிட, சிறை அதிகாரிகள் சிலர் தீர்மானித்துள்ளனர். சிறைச்சாலை தலைமையக தகவல்கள் இதனை வெளிப்படுத்தின. கடந்த 6 ஆம் திகதி, நடக்கக் கூட முடியாத நிலையில் மதுபோதையில் தள்ளாடிய வண்ணம், இராஜாங்க அமைச்சரும் அவரது நண்பர்கள் சிலரும் வெலிக்கடை சிறைச்சாலை…