சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் 24 வீடுகள் நிர்மாணம் !

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதியுதவியின் கீழ் மீள்குடியேற்றப்பட்ட பயனாளிகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் 24 வீடுகள் நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத் திட்டத்திற்கு அமைய பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கும் நிகழ்வும் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். எம் ஹனிபா தலைமையில் நேற்று(17) நடை பெற்றது. இந்நிகழ்விற்கு…

Read More

அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்களின் சம்மேள கலந்துரையாடல் !

நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத்தினை மேலும் வலுவூட்டும் வகையிலான முக்கிய கலந்துரையாடல் அக்கரைப்பற்று மாநகர பிதா அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் (17) வெள்ளிக்கிழமை மாலை அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெற்றது. அனைத்து நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எச்.சீ.எம்.லாபீர் முன்னிலையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் அக்கரைப்பற்று உலமா சபை உறுப்பினர்கள், அக்கரைப்பற்றில் உள்ள பள்ளிவாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிவாசல் நிருவாகிகள்,…

Read More

வெளியேறினார் கோட்டாபய – நாட்டின் தலைவாரகிறார் சபாநாயகர் மஹிந்த யாப்பா..!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டை விட்டு கோட்டாபய வெளியேறியுள்ள நிலையில், சிறிலங்காவின் தற்காலிக தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் நாட்டின் தற்காலிக தலைவராகவே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனத செயற்படவுள்ளார். அத்துடன் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய…

Read More

தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்-மனித உரிமைகள் ஆணைக்குழு நேரடிக் களத்தில்..!

லொஹான் ரத்வத்தே தொடர்பில் பெரும் சர்ச்சைக்குள்ளான விவகாரத்தை விசாரணை மேற்கொள்வதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நேரடியாக களமிறங்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று பிராந்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள் இந்த சம்பவங்களை விசாரிக்க செப்டம்பர் 15ம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், உண்மையை வெளிக்கொணர சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக…

Read More

சிறைச்சாலையில் அட்டகாசம் புரிந்த லொகானுக்கு “ஆப்பு” ரெடி! பிரதமர் நாடு திரும்பியதும் இறுதி முடிவு

சிறைச்சாலைகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தயின் செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறிலங்கா பொதுசன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு நண்பர்கள் குழுவுடன் மதுபோதையில் நுழைந்து கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பம் குறித்து சிறிலங்கா பொதுசன பெரமுனவின் மத்திய செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடிவுசெய்துள்ளது. இத்தாலிக்கு பயணம் செய்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்த வார இறுதியில் நாடு…

Read More

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது : வசதி படைத்தோர் மக்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் – கலையரசன் எம்.பி..!

நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் கொடுப்பவர்கள் கடவுளுக்குச் சமம் என்பார்கள். புலம்பெயர் தமிழர்கள் சிறுகைத்தொழில் வசதிகளை எமது மக்களுக்காக ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதுவே அவர்களது வாழ்க்கையை நிலைபேறடையச் செய்யும்.” என வேண்டுகோள் ஒன்றை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இக் கொரொனா தாக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ள நிலையில் சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியரூபன் செய்துள்ள மக்கள் சேவையை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். இவரைப் போல் மற்றவர்களும் எம் மக்களுக்கு உதவிகளைச்…

Read More

மதுசாலைகளில் அலைமோதும் “குடிமக்கள்” : இலங்கையில் என்ன நடக்கிறது என மக்கள் அங்கலாய்ப்பு !

நூருல் ஹுதா உமர் இலங்கையில் என்ன நடக்கிறது என மக்கள் அங்கலாய்க்கின்றனர். அத்தியாவசிய உணவு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன. நாட்டில் பொது முடக்கம் ஒக்டோபர் முதலாம் திகதிவரை அமுலில் உள்ளது. ஆனால் மதுபான விற்பனை சாலைகள் அனைத்தும் நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பசி பட்டினியால் விலைவாசி அதிகரிப்பு வாழ்க்கைச் செலவு உயர்வு என்பனவற்றுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வீடுகளில் முடங்கியுள்ளனர். பெருங்குடி மக்களோ 1000 ரூபாய் 5000…

Read More