
அல்லாஹ்தான் எல்லாவற்றினதும் சூத்திரதாரி – மீண்டும் பகிரங்கமாக சொன்னார் ஞானசார தேரர் !
இஸ்லாமியர்களின் இறைவன் அல்லாஹ் மீது அவதூறான கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பொதுபலசேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று மீண்டும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். தனியார் இணைய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், தனக்கெதிராக பொலிஸ் செல்வோர் உட்பட்ட பலரை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,எனக்கெதிராக சி ஐ டி செல்வோர், எனக்கெதிராக விமர்சனங்களை செய்வோர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். எனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்பதை நான் கூறிவைக்க விரும்புகிறேன்.சஹ்ரானின் கொள்கைகளை பின்பற்றுவோர்…