இத்தாலி செல்லும் முன்னர் மஹிந்த – கோட்டாபய – பஷில் அவசர சந்திப்பு..!

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று இத்தாலிக்கு செல்ல முன் நேற்று இரவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தியுள்ளார் என தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷவும் கலந்து கொண்டிருந்தார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்க்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் அதில் பங்கேற்கவில்லை. ஜனாதிபதி தலைமையில் நடந்த இந்த சந்திப்பில் பல முடிவுகள் எடுக்கப்பட்டதாக மேலும் கூறப்படுகிறது.

Read More

பிரதமர் மஹிந்த இத்தாலி பயணம்..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இத்தாலிக்குச் சென்றுள்ளனர். போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டே பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.

Read More

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் செப்டம்பர் 21 வரை நீடிப்பு..!

செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More

ஆப்கானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டால் ஆண்கள் அணியுடான டெஸ்ட் போட்டி இரத்து – அவுஸ்திரேலியா எச்சரிக்கை..!

தலிபானின் ஆட்சியின் கீழ் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டால் ஆண்கள் அணியுடனான டெஸ்ட்போட்டியை இரத்துச்செய்யப்போவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.பெண்கள் அனைத்து நிலைகளிலும் கிரிக்கெட் விளையாடுவதை முழுமையாக ஆதரிப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.ஆப்கானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையானவை என்றால் ஹொபார்ட்டில் நடைபெறவுள்ள ஆப்கான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.அவுஸ்திரேலிய ஆப்கான் அணிகளிற்கு இடையிலான முதலாவது…

Read More

சினோபாம் 2 டோஸ்களையும் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டோர் 3ஆவது டோஸாக பிறிதொரு தடுப்பூசியைப் பெற வேண்டும் – இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை..!

இரண்டு டோஸ் சினோபாம் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பலவீனமான நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களுக்கும் மூன்றாவது டோஸாக பைசர் அல்லது மொடர்னா அல்லது அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றைச் செலுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரியுள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை களிலும் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் இருப்பதாகவும் சினோபாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நூற்றுக்கு 7 வீதமா னோருக்கு அந்த நிலைமை…

Read More

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கொரோனா பிரிவுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

நூருல் ஹுதா உமர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கடல் கடந்து வாழ் கல்முனை உறவுகளினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு சில மருத்துவ உபகரணங்களின் அவசியத் தேவை கருதி வைத்தியசாலையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு…

Read More

241 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி, அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலைக்கு விஜயம் !

நூருல் ஹுதா உமர் கொரோணா தொற்று பரவல் நிலைமை தற்போது தீவிரமடைந்து வருவதால் இது குறித்து மக்களுக்கு விழிப்பூட்டும் செயல்பாடுகளை நிந்தவூர் அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக நிந்தவூர் அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே எல் நக்பரின் அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்ட 241 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கேணல் ஏ.எம்.சி. அபயகோன் நிந்தவூர் அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா…

Read More

கல்முனை பிராந்தியத்திற்கு வேர்ல்ட் விசன் நிறுவனத்தினால் 80 நோயாளர் கட்டில்கள் வழங்கிவைப்பு..!

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணனின் வேண்டுகோளுக்கு இணங்க வேர்ல்ட் விசன் நிறுவனத்தினால் கல்முனை பிராந்தியதிற்கு உட்பட்ட வைத்தியசாலைகளுக்கு 80 நோயாளர் கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டன. கொவிட் 19 தொற்று பரவல் நிலைமையை அடுத்து கல்முனைப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நோயாளர்களுக்கான கட்டில்கள் தட்டுப்பாடு குறித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக இந்த கட்டில்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் படி சுமார் 15…

Read More

‘மை’ தீரும் வரை பணம் அச்சடிக்கும் அரசாங்கம் – முஜீபுர் ரஹ்மான்..!

அச்சகங்களில் ‘மை’ தீரூம் வரை அரசாங்கம் புதிதாக பணம் அச்சடிப்பதை நிறுத்துவதாக இல்லையென நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான். இலங்கையின் பண வீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அண்மைக்காலமாக பல பில்லியன் ரூபாக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே, இது தொடர்பில் அவர் நாடாளுமன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கல்முனை பிராந்தியத்தில் டெல்டா அபாயம்: பணிப்பாளர் சுகுணன் எச்சரிக்கை!

(நூருள் ஹுதா உமர்) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட PCR பரிசோதனை மாதிரிகளில் 95 வீதமானவை டெல்டா தொற்றுக்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,, கடந்த 4ஆம் திகதி கல்முனைப் பிராந்தியத்தில் இருந்து புறப்பட்ட PCR மாதிரிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக இரசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 18…

Read More

தவம் தவமிருக்கின்றாரா..?

தவம் மிக அழகிய விதத்தில் சமூக வலைத்தள அரசியலை முன்னெடுக்கின்றார். அண்மைக் காலமாக அ.இ.ம.கா தலைவர் மீது அவருக்கு பாசம் பொங்கி வழிகின்றது. அது பாசமல்ல, வேசமாகும். பா.உறுப்பினர் முஷர்ரப்பை இகழ்வதற்காக அவர் எடுத்துள்ள ஆயுதமே, அந்த பாச விளையாட்டுக்கள். பாராளுமன்றத்தில் நேற்றும், அதற்கு முன்னைய தினமும் வாக்கெடுப்புக்கள் நடைபெற்றிருந்தன. நேற்று நடந்த வாக்கெடுப்பில் மு.காவின் தலைவர் எதிர்த்து வாக்களிக்க, மு.காவின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அதற்கு முன்பு நடைபெற்றிருந்த வாக்கெடுப்பில் மு.காவின் தலைவர்…

Read More

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கும் புதிய சுற்று நிரூபம் வெளியாகியுள்ளது..!

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பதற்கான புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தனவினால் இந்த சுற்று நிரூபம் நேற்றைய தினம் (07) வெளியிடப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் அரச சேவைகளிலுள்ள கொவிட் தொற்றாளர்கள், தொற்றுக்குள்ளாகி 10 நாட்களின் பின்னர் நோய் அறிகுறிகளோ அல்லது காய்ச்சலோ இல்லையெனில், எந்தவித பரிசோதனைகளும் இன்றி, தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் என…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாப்பரசரிடம் பிழையாக கருத்துரைக்க பிரதமர், வெளிவிவகார அமைச்சர் திட்டம் – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை..!

(எம்.எம்.சில்வெஸ்டர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக சர்வதேச தரப்பு மற்றும் பரிசுத்த பாப்பரசரிடம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக பிழையான கருத்தை முன்வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்கான நடவடிக்கைகளை நாட்டின் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,உயிர்த்த ஞாயிறு…

Read More

அமைச்சர் விமல் உள்ளிட்ட 27 ஆளும் கட்சியினர் அவசரகால சட்ட வாக்கெடுப்பிலில் பங்கேட்க வில்லை – ஆளும் கட்சிக்குள் பரபரப்பு..!

அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக அரசின் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் என 27 பேர் வாக்களிப்பிற்கு சமுகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வாக்களிக்க வருகை தராதவர்களில் 9 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் மற்றும் ஆறு பேர் வெளிநாட்டில் உள்ளனர். ஆளும் கட்சி எம்பி கபில அத்துகோரள வரும்போது, ​​வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அதுரலிய ரத்ன தேரர்,விமல் வீரவன்ச, எஸ். வியாழேந்திரன், ஏ. எல். எம். அதாவுல்லா,விஜயதாச ராஜபக்ச மற்றும் அசோக பண்டாரியந்த ஆகியோர் வாக்கெடுப்பில் சமுகமளிக்கவில்லை அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை….

Read More

பிரதமர் ICUவில் என வதந்தி : பிரதமர் அலுவலகம்..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பிபிசி செய்தியென போலியாக உருவாக்கப்பட்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் அதில் எந்த உண்மையுமில்லையெனவும் தெரிவிக்கிறது பிரதமர் அலுவலகம். கடந்த சில வாரங்களாக பிரதமரைத் தொடர்பு படுத்தி அவர் சுகயீனமுற்றிருப்பதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வப் போது தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. பிரதமர் இத்தாலி செல்லவுள்ள நிலையில் தற்போது இவ்வாறு பரவும் தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அமெரிக்கா: இலங்கைப் பயணத்தை தவிர்க்குமாறு எச்சரிக்கை..!

இலங்கையில் கொரோனா தொற்று தீவிரத்தின் பின்னணியில் அங்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்காவின் தொற்று நோய் தடுப்பு மற்றும் முகாமைத்துவ மையம். இலங்கையில் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டும் தினசரி மரண பட்டியலில் நூற்றுக்கணக்கான மரணங்கள் இணைக்கப்பட்டும் வெளியிடப்படுகிறது. எனினும், உண்மையான தகவல்கள் மறைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் விசனம் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், பல நாடுகள் இலங்கையைத் தொடர்ந்தும் ‘சிவப்பு’ பட்டியலில் வைத்துள்ளதுடன் இங்கிருந்து பயணிப்போர் பெரும் செலவில் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வாழ்வாதாரம் முடக்கப்பட்ட குடும்பங்களுக்கான கல்முனையன்ஸ் போரத்தின் நான்காம் கட்ட நிவாரண நிதி விநியோகம்..!

நூருள் ஹுதா உமர் கொவிட் தீவிர பரவல் காரணமாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நாட்டின் முடக்க நிலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து கல்முனையன்ஸ் போரம் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது நாட்டில் அமுலிலிருக்கும் லொக்டவுண் காரணமாக வாழ்வாதாரம் முடக்கப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கான நான்காம் கட்டமாக நிவாரண விநியோகம் நிதியாக பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. கல்முனை, இஸ்லாமபாத் ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 225 பயனாளிக்குடும்பங்களுக்கு தலா ரூபா 2,000/= படி நிவாரண நிதி கடந்த இரு…

Read More

மத்திய வங்கியின் கவர்னர் பதவியை கேபினட் அந்தஸ்துடன் கோரிய கப்ரால்..!

மாநில அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் மத்திய வங்கியின் கவர்னர் பதவியை கேபினட் அந்தஸ்துடன் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது என்று டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, சீனா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளைப் போலவே, அரசாங்க எம்.பி.கேபிரால் ஒரு கேபினட் அமைச்சரைப் போன்ற அதிகாரத்துடன் பதவியை நாடினார் மற்றும் நெறிமுறைகளின் அடிப்படையில் பணம் மற்றும் மூலதனச் சந்தைகளில் முடிவுகளை எடுப்பது, தடையின்றி, டெய்லி மிரர் செய்தி அறிக்கை மேலும் கூறியுள்ளது. நிதி மற்றும் மூலதன…

Read More

இலங்கையின் மருத்துவதுறை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றது – இராஜாங்க அமைச்சர்..!

இலங்கையின் மருத்துவதுறை கொரோனா வைரசினை கட்டுப்படுத்தமுடியாமல் திணறுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தனியார்நிறுவனமொன்று வழங்கிய 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மிகவேகமாக பரவும் டெல்டா வைரசினை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கையின் சுகாதார முறை திணறுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் இந்த தருணத்தில் இ;வ்வாறான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டமை உரிய தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட…

Read More

மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதியை நிறுத்த தீர்மானம் – மஹிந்தானந்த..!

மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதி செய் வதை நிறுத்தி விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித் துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நுகர்வுக்காகத் தேவையான மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விவசாய அமைச்சகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் விவசாய திணைக்களத்தின் பணிப் பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டீ சில்வாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்….

Read More

ஆப்கான்: தற்காலிக அமைச்சரவை பட்டியல் வெளியீடு; இடைக்கால பிரதமராகிறார் முல்லா ஹசன் அகுந்த்..!

அமெரிக்க காவல்துறையால் தேடப்படும் நபரான சிராஜூதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறப்போவதாக அமெரிக்க படைகள் அறிவித்த நிலையில், அங்கு தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். கடந்த மாத இறுதியில் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில், ஒரு வாரத்துக்குப் பின் தலிபான்கள் இடைக்கால அரசுக்கான பிரதிநிதிகளை அறிவித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக, அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்கள் இடைக்கால அரசில் இடம்பெற்றுள்ளனர். பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுந்த்,…

Read More

1600 பில்லியன் ரூபா வருமான வீழ்ச்சி: நிதியமைச்சர்..!

நாட்டின் செலவோடு ஒப்பிடுகையில் வருவாய் மிகக்குறைவாகவே உள்ளதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச. எதிர்பார்த்ததை விட 1500 – 1600 பில்லியன் ரூபா வருமானம் வீழ்ச்சியடைந்திருப்பதாக இதன் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா சூழ்நிலை இதற்கான பிரதான காரணம் என அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கள்ளன் பொலிஸ் விளையாட்டில் ராஜபக்ச அரசு – வெறும் கண்துடைப்பு என்கிறார் துசாரா இந்துனில்..!

ராஜபக்ஷ அரசாங்கம் அத்தியவசியப் பொருட்கள் விடயத்தில் கள்ளன் பொலிஸ் விளையாட்டு விளையாடுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. தமக்குத் தேவையான விடயங்களை செய்து முடிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் அவசர காலச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசாரா இந்துனில் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ராஜபக்ஷ அரசாங்கம் கள்ளன் பொலிஸ் விளையாட்டில் ஈடுபட்டுவருகின்றது….

Read More

ஆப்கான்: ஆண்-பெண் மாணவர்களுக்கிடையே திரை கட்டி வகுப்புகள் ஆரம்பம்..!

ஆண்-பெண் மாணவர்களுக்கு நடுவில் திரை கட்டி வகுப்புகள் நடப்பதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. உள்நாட்டுப் போருக்குப் பின் ஆப்கானிஸ்தான் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்புவதைத் தொடர்ந்து, அங்கு பல்கலைக்கழகங்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தலிபானின் கல்வி ஆணையம், கல்வி நிலையங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக AFP செய்தி நிறுவனம் கூறுகிறது அதில், மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்த வேண்டும் அல்லது நல்ல குணமுள்ள முதிய வயது ஆண் ஆசிரியர்களைக்…

Read More

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்பதை விட பசில் காங்கிரஸ் உறுப்பினர்களாகவே செயற்படுகின்றனர் – இம்ரான்..!

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்பதை விட பசில் காங்கிரஸ் உறுப்பினர்களாகவே முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களை காண்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்இன்று நடைபெற்ற நிதி சட்டமூல வாக்கெடுப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் , இன்று ஒரு கிலோ சீனியை பெற சதோச முன்னால் நூற்றுக்கணக்கான மக்கள் பல மணிநேரம் வரிசையில் நிற்கின்றனர்.நூறு ரூபாவை சேமிக்கவே இவ்வாறு கொரோனா தொற்றையும் கவனிக்காமல் வரிசையில் நிற்கின்றனர்.இதுவே இந்நாட்டு மக்களின் தற்போதைய…

Read More