நாட்டில் சிறந்ததொரு இளைஞர் படையணியை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது!

தகவல் தொழில் நுட்பத்தையும் ஆங்கிலத்தையும் கட்டாயப்படுத்தி அதனை இலகுவாகவும் இலவசமாகவும் வழங்குவதன் ஊடாக நாட்டில் சிறந்ததொரு இளைஞர் படையணியை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூவக்கர் தெரிவித்தார் இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் நிலையம் நடத்திய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கற்கை நெறிகளை பின்பற்றி பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு NVQ4 சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் கேட்போர்…

Read More

அத்தியாவசியப் பொருட்களின் விலையை வர்த்தகர்கள் தீர்மானிப்பார்களாயின் அரசு எதற்கு?

வெகுவிரைவில் பொதுமக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடுவார்கள் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே (Ranjith Vithanage) தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், உணவு பொருட்கள் தட்டுப்பாடு குறித்து அரசு குறிப்பிடும் கருத்து வெறுக்கத்தக்கதாக உள்ளது. காலையில் எந்தப் பொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நடுத்தர மக்கள்…

Read More

மேல் மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று (31) மற்றும் நாளை (1) இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு கடமையில், சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்தக் கடமைகளுக்காக கொழும்பில் அதிகளவான புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்…

Read More

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய நாளை முதல் புதிய சட்டம் அமுல்!

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக பதிவாளர் திணைக் களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டவர் தங்கள் நாட்டின் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த விதிகள் அமுலுக்கு வரும்…

Read More

தொடர் தொழிற்சங்க போராட்டம் – அரசுக்கு எச்சரிக்கை!

அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் சம்பளம் அதிரிக்கப்படவேண்டும் என, ஆசிரியர் – அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு அதிகரிக்கப்படாவிட்டால் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக  அந்த சம்மேளனம் எச்சரித்துள்ளது. அத்துடன், சம்பள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் இதுவரை வெளியிடப்படவில்லையென இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More

வடக்கு, கிழக்கு குறித்து சுமந்திரன் கருத்து!

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதற்கு இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாக இருந்தால், சீனா போன்ற பிற நாடுகள் வடக்கு, கிழக்கில் காலூன்றுவதைத் தடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கிய அவர், தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இருக்கின்ற போது, சீனா போன்ற நாடுகள் வடக்கு கிழக்கில் தலையீடுகளை…

Read More

“மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேச மட்டம்வரை உயர்த்தும் கடப்பாடு உள்ளது” – மனோ!

இந்நாட்டில் வாழும் வடகிழக்கு, முஸ்லிம் தேசிய இனங்களுடன் கரங்கோர்த்து, சிங்கள சகோதர மக்களுக்கும் ஒரு செய்தியை சொல்லி, மலையக மக்களின் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கும் உயர்த்த வேண்டிய வரலாற்று கடமை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது. சமீபத்து இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர்களின் விவகாரங்களை தொடர்ந்தும் தோட்ட, பிரதேச, மாவட்ட பிரச்சினைகளாக மட்டும் முடக்காமல், ஏனைய சகோதர சமூகங்களது பிரச்சனைகளை போல் தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கு…

Read More

“மஹிந்த தலைமையிலான ஆட்சியை கலைக்கவும் முடியாது, கவிழ்க்கவும் முடியாது” – ஜீ. எல்.பீரிஸ்!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும் இலங்கை பிரதமராகவும் மஹிந்த ராஜபக்‌ஷவே உள்ளார். அவர் தலைமையிலான ஆட்சியை இனி ஒருபோதும் கலைக்கவும் முடியாது, கவிழ்க்கவும் முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ‘மொட்டு’ அரசு விரைவில் கவிழும் என்று சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியினர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை ஆரம்பிக்கும்போது நாம் பல சவால்களை…

Read More

துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க தேவையான டொலர்களை வழங்கப்படும்!

கடந்த சில தினங்களாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்கும், பொருட்களை விநியோகிக்கும் முறைகள் குறித்து ஆராய்வதற்காகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களை கண்காணிக்கும் பணியில் இணைந்துகொண்டார். இதன்போது புறக்கோட்டை மொத்த வியாபாரிகளுடனான கலந்துரையாடலின் போது , அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று அவர்கள் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ‘சந்தையில் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரிசியின் விலையை 5…

Read More

மாவடிப்பள்ளியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

காரைதீவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாவடிப்பள்ளி கிழக்கு  மையவாடி வீதியிலேயே இந்த எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காரைதீவுப்பிரதேசத்தில் இடம்பெற்ற முதலாவது எரிவாயு அடுப்பு வெடிப்புச்சம்வம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அரச ஊழியர்களை சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்ற கோரிக்கை – முகம்மட் முக்தார்!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்க ஊழியர்களை அவர்களது சொந்த மாவட்டத்திலுள்ள காரியாலயங்களுக்கு இடமாற்றம் செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தென்கிழக்கு கல்விப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் உள்ளிட்டோருக்கு அவசர மகஜர்களை அனுப்பி வைத்திருப்பதாக மேற்படி பேரவையின் தவிசாளரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார், இன்று (30) தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; மாகாணம் மற்றும் மாவட்டம் கடந்து…

Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது. இப்பட்டமளிப்பு விழா நிகழ்வுகள், பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ்  அபூபக்கர் தலைமையில், நான்கு நாள்களுக்கு ஐந்து அமர்வுகளாக நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளன. முதல் அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள், பொறியியல் ஆகிய பீடங்களைச் சேர்ந்த 474 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இரண்டாம் நாள் அமர்வில் கலை, கலாசார பீடத்தைச் சேர்ந்த 566 மாணவர்களும்…

Read More

17 ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கு கிடைக்காத மருதமுனை சுனாமி வீடுகள்!

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமிப் பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்காக கட்டப்பட்ட வீட்டுத் திட்டமே மருதமுனை 65 மீட்டர் வீட்டுத் திட்டமாகும். கடற்கரையிலிருந்து 65 மீட்டர் எல்லைக்குள் குடியிருந்து இருப்பிடங்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கிராமத்தின் மேற்குப் புறமாக கிடந்த மேட்டுவட்டை காணியில் தேசிய வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் 186 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரச அபிவிருத்தி நிர்மாண கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் நிர்மாண வேலைகள் 2006 ஆம் ஆண்டு…

Read More

திருக்கோவில் பொலிஸாருக்கு உடனடி இடமாற்றம்!

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, அங்கு கடமையாற்றிவரும் அனைத்துப் பொலிஸாரையும்  உடனடியாக இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி இரவு, பொலிஸ் சாஜன் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 04 பொலிஸார் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் சாஜன், துப்பாக்கிகளுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா…

Read More

யாழிலும் இன்று தொழிற்சங்க நடவடிக்கை!

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து, நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை, இன்று (30), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணியளவில், வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள், கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் சுகாதார துறையை அழிக்காதே, சுகாதார நிர்வாக சேவையை ஆரம்பி,விசேட கொடுப்பனவை உயர்த்து, பொது மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடு, பதவி உயர்வு முரண்பாட்டை தீர்த்து வை, பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக…

Read More

தேசிய கலாசார விழாவாகக் கொண்டாடப்படவுள்ள கல்முனை கடற்கரைப் பள்ளி கொடியேற்றம்; செயலாற்றுக் குழு நியமனம்!

அரச அங்கீகாரத்துடன், தேசிய கலாசார விழாவாகக் கொண்டாடப்படவுள்ள கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்று விழாவுக்காக, கல்முனை மாநகர சபையால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களைக் கையாள்வதற்காக விசேட செயலாற்றுக் குழுவொன்று, மாநகர மேயரால் நியமிக்கப்பட்டுள்ளது. இக் கொடியேற்று விழா ஏற்பாடுகள் தொடர்பாக கல்முனை மாநகர சபையில், மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், இன்று (30) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இக்குழுவினரை நியமனம் செய்தார். மாநகர சபையின் அதிகாரிகள் தரப்பில்…

Read More

மஹிந்த பதவி விலக இடமளிக்க முடியாது?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப் போவதாக முகநூல்களில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையெனவும்,  நாட்டு மக்களினதும் மதத் தலைவர்களினதும் பூரண ஒத்துழைப்பபை பெற்றிருக்கும் பிரதமர், தமது பதவியை இராஜினாமாச் செய்ய ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் புத்தசாசன அமைச்சின் முன்னாள் ஆலோசகர் கலகம தம்மரங்ஸி தேரர் தெரிவித்தார். புத்தசாசன கலாசார சமய அலுவல்கள்  அமைச்சில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த அவர், அது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, சில முகநூல்களில் பிரதமர் மஹிந்த…

Read More

நிந்தவூரில் கரையொதுங்கிய இராட்சத கடலாமை!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர்  கடற்கரையில் நேற்று (29) இரவு, சுமார் 3 அடி, 150 கிலோ எடையுடைய உயிருடன் கடலாமை ஒன்று  உயிருடன்  கரையொதுங்கியுள்ளதாக, நிந்தவூர் வெளவால் ஓடை   மீனவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட   கடற்றொழில் திணைக்கள உத்தியோகர்கள், பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, ஏற்கனவே  அம்பாறை மாவட்டம், கல்முனை  பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை பாண்டிருப்பு  கடற்கரை பகுதியில்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிருடன் கடலாமைகள்…

Read More

‘முஸ்லிம் நாடுகள் நமது நட்பு நாடுகள்’ – ஜோன்ஸ்டன்!

எமது அரசாங்கத்திற்கு முஸ்லிம் நாடுகள் உதவுவதில்லையென்ற எதிர்க்கட்சிகளின் கருத்து பொய்யாகியுள்ளது. முஸ்லிம் நாடுகள் நமது நட்பு நாடுகள். அந்த உறவை தான் எதிர்க்கட்சிகள் உடைக்கப் பார்க்கின்றன என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். 7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட, பிபிலை முதல் செங்கலடி வரையிலான வீதியை திறந்து வைக்கும் நிகழ்வில் (28) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முஸ்லிம்களுக்கும் தங்களுக்குமி டையில் பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக தெரிவித்த அவர் முஸ்லிம்களுக்கு…

Read More

‘ஒமிக்ரோன் தொற்று பரவல் அபாய கட்டத்தை நெருங்கியுள்ளது’ – WHO அறிவிப்பு!

ஒமிக்ரோனை எதிர்கொள்ள பூஸ்டர் தடுப்பூசிகள் வேகமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்தது. இதன் பின்னர் கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரோன் என்ற உருமாற்றமடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது. மட்டுமல்லாமல் இந்த வைரஸ் டெல்டாவை…

Read More

‘அனைத்தின மக்களையும் சமமாக அங்கீகரிக்கும் சட்டக் கட்டமைப்பை ஏற்படுத்துங்கள்’ 

அனைத்து இன மக்களையும் சமமாக ஏற்றுக்கொண்டு அங்கீகாரமளிக்கும் சட்டக் கட்டமைப்பின் தேவை அத்தியாவசியமாகியுள்ளது என்று, “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு (29) வருகை தந்திருந்த “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதிச் செயலணியிடம், தமது கருத்துக்களை முன்வைத்துப் பேசிய சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த அறக்கட்டளையின் பிரதிப் பணிப்பாளர் ஜே.தியாகராஜா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு பலமுறை திருத்தப்பட்டது. அதன் குறைபாடுகளை…

Read More

2020 – A/L பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று!

2020 உயர்தர பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று  வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்தின் https://doenets.lk/  அல்லது www.results.exams.gov.lk   என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 51 ஆயிரத்திற்கு மேற்பட்ட பரீட்சாத்திகள் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மாவின் புதிய விலை அறிவிப்பு..!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 1 கிலோ பால்மா பக்கெற்றின் திருத்தப்பட்ட விலை ரூ.1,345 ஆகவும், 400 கிராம் பக்கெற் ஒன்றின் விலை ரூ.540 ஆகவும் உயரவுள்ளன. உலகச் சந்தையில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால், தற்போதைய விலையில் தொடர்ந்து பால்மாவை வழங்க முடியாது…

Read More

பால்மா விலையேற்றத்தால் தேநீர் விற்பனையை இடைநிறுத்த தீர்மானம் – அசேல சம்பத்..!

பால்மாவின் விலை அதிகரிப்பால், தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.உணவகங்களில் டின் பாலை பயன்படுத்தி தேநீர் தயாரிக்க உத்தேசித்துள்ளதாக சங்கத்தின் தலைவரான அசேல சம்பத், தெரிவித்தார். பால்மாவின் விலையும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கோப்பை தேநீரின் விலையும் அதிகரிக்கப்பட்டால் பொது மக்களுக்கு மேலும் சுமை ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.தட்டுப்பாடு, வரிசைகள் மற்றும் பொருட்களின் விலையை உயர்த்தும் கொள்கையை அரசாங்கம் தொடர்கிறது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ…

Read More

மனோவையும் ஹக்கீமையும் சர்வதேசமே இயக்குகின்றது- விமல்..!

மனோ கணேசன், ஹக்கீம் போன்றவர்கள் இணைந்து 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பின்னணியில் சர்வதேச நிகழ்ச்சி நிரலே இருக்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஏனைய நாடுகளும் தமது அரசியல் பொதிகளைத் திணிக்க நினைக்கின்றன.” இவ்வாறு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “நாடு இன்று பாரிய நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்டுள்ளதுடன் சில இறுக்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணய…

Read More