வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவின் மறைவிற்கு முஸம்மிலின் புகைப்படத்துடன் இரங்கல் தெரிவித்த பிரதேச சபை!

கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே, இன்று காலை (07) காலமானார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, வடமேல் மாகாணம் முழுவதிலும் உள்ள பிரதேச சபைகள், மாநகர சபைகள் போன்றவற்றில் ஆளுநரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதேவெளை, ஆளுநரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து, வாரியபொல பிரதேச சபையின் தலைவர், செயலாளர் மற்றும் சபையின் தலைவர்கள் காட்சிப்படுத்தியிருந்த பேனரில், ராஜா கொல்லூரேயின் புகைப்படத்திற்கு…

Read More

முஸ்லிம் எம்.பிக்களுக்கு அமைச்சர்பதவி வழங்குவது தொடர்பில்எந்தத் தீர்மானமுமில்லை: அரசாங்கம்..!

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் குழுவிற்கு அமைச்சர் பதவிகள் வழங்குவது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமுமில்லை என அரசாங்கம் இன்று (07) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளரான ரமேஷ் பத்திரன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் 20ஆவது திருத்தச் சட்டம்…

Read More

சியல்கோர்ட் சம்பவம்; வெட்கமும் துக்கமும்!

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டமையினால், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவிலும் அதேபோன்று, இலங்கை முஸ்லிம்கள் மற்றும் சிங்கள சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திலும் ஒரு எதி;hபாராத தர்மசங்கடமும், நெருக்கடி நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் மீதான இன, மத நெருக்கடிகள் சற்று தளர்வடையத் தொடங்கும் தருணங்களில், எதோ ஒரு திசையில் இருந்து இவ்வாறான ஒரு இக்கட்டான நிலை தோற்றுவிக்கப்படுவது அண்மைக்காலங்களில் தொடர் நிகழ்வாகியிருக்கின்றது. ‘இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டுள்ளார்’ என்ற செய்திக்கும், ‘இலங்கையைச்…

Read More

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளர் நியமனம்!

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளராக டி.எம்.எல்.பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை, திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் வைத்து சமயத் தலைவர்களின் ஆசிர்வாதத்துடன், உத்தியோகபூர்வமாக இன்று (07) ஆரம்பித்தார். இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாடிகோராள மற்றும் திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான டி.எம்.எல்.பண்டாரநாயக்க, இதற்கு முன்னர் அம்பாறை மாவட்டச் செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Read More

முன்னணி ஆடை உற்பத்தியாளரான பிரண்டிக்ஸ் ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளராக தெரிவு!

இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தியாளரான பிரண்டிக்ஸ், ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளராக 7ஆவது தடவையாகவும் 2019/20 மற்றும் 2020/21 காலப் பகுதிகளுக்கான 24ஆவது ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்டிருந்தது. 2019/20 காலப் பகுதிக்காக இந்த விருதை பிரண்டிக்ஸ் சுவீகரித்திருந்தது. ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இடம்பெற்றது. நிறுவனத்தின் 60000 க்கும் அதிகமான ஊழியர்களின் பங்களிப்பினூடாக இந்தக் காலப் பகுதியில் சகல பிரிவுகளிலும் உயர் ஏற்றுமதியாளராக நிறுவனம்…

Read More

கல்முனையில் கட்டாக்காலிகளால் தொல்லை : களத்தில் இறங்கி கட்டுப்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறது கல்முனை மாநகர சபை !

நூருள் ஹுதா உமர் கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் காட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் வாகனப்போக்குவரத்து நெரிசல் நிரம்பிய அவசர நேரங்களில் மட்டுமின்றி இரவு வேளைகளிலும் உள்ளதன் காரணமாக பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன் விபத்து சம்பவங்களும் இடம்பெறும் அபாயம் நிலவிவருகிறது. இது தொடர்பில் கல்முனை மாநகர சபை முதல்வர், ஆணையாளர், உறுப்பினர்கள் கவனம் செலுத்தி இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து கல்முனை மாநகர முதல்வர்…

Read More

பிரியந்தவின் உடலுக்கு மக்கள் அஞ்சலி – இறுதிக் கிரியை நாளை!

பாகிஸ்தானின் சியல்கோர்ட் நகரில் அடித்துக்கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவதனவின் சடலம், இன்று (07) அதிகாலை 3.00 மணியளவில், கனேமுல்லையில் உள்ள அவரது  வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சியல்கோர்ட் நகரில் தொழிற்சாலை முகாமையாளராக பணியாற்றி வந்த 48 வயதான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டு அவரது உடல் எரியூட்டப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் லாகூ​​ரியிலிருந்து புறப்பட்ட யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் மூலம் அவரது உடலை தாங்கிய பேழை நேற்று…

Read More

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி நியமனம்!

இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் விகும் லியனகே இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரதம அதிகாரியாக (Chief of Staff of the Sri Lanka Army) நியமிக்கப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும், பாதுகாப்பு அமைச்சினதும் பரிந்துரைக்கு அமைய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்…

Read More

திருகோணமலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்!

ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று திருகோணமலை – பாலமோட்டாறு பகுதியில் வைத்து பாதையை விட்டு விலகி, இன்று (07) காலை விபத்துக்குள்ளானது. இதில் பஸ் சாரதி உட்பட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்  26 படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

சஜித் தலைமையில் இன்றும் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!

இலங்கையின் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் வன்முறையை எதிர்க்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க தீர்மானித்து நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக இரண்டாவது நாளாகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலேயே எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க முடிவெடுத்தனர் இதேவேளை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்காமல் இருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில்…

Read More