ரஞ்சன் ராமநாயக்கவுக்காக ஜெனிவா பயணிக்கும் விசேட பேருந்து..!

இத்தாலியில் மிலானோ நகரில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக (Ranjan Ramanayake) ஜெனிவா செல்லும் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு  தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்காக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் மனுவை சமர்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதனடிப்படையில் மிலானோ நகரில் எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட பேருந்தில் இவர்கள் ஜெனிவாவுக்கான பயணத்தை ஆரம்பிக்க உள்ளனர். ஜெனிவாவில் மனித…

Read More

26 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது..!

தொடர்ந்தும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  26 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார். மேலும், 700,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய 59 மில்லியன் டொலர்கள் செலவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Read More

முஸ்லிம்களுக்கு கதவடைப்பு – அரச ஆதரவு Mp க்கள் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் காட்டட்டும் என சவால் விடுக்கின்றேன்..!

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தில் முஸ்லிம் பணிப்பளார்களுக்கு கதவடைப்பு செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், தமிழில் பணிபுரிய முடியாத தவிசாளரும் பொதுமுகாமையாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதற்கு அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.பிக்கள் அனுமதி வழங்கியுள்ளனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார் இது தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று (07) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “கிழக்கு மாகாணத்தில் 75 சதவீதத்துக்கும் மேல் தமிழ் பேசும் மாணவர்களைக் கொண்ட பாலர் பாடசாலைகள் இயங்குகின்றன….

Read More

கடல்சார் அனர்த்த தவிர்ப்பு தொடர்பாக மீனவர்களுடன் கலந்துரையாடிய பல்கலைக்கழகம் : பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வு..!

(நூறுல் ஹுதா உமர், றாஸிக் நபாயிஸ், ஏ.எல்.எம். ஷினாஸ்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக அனர்த்த தவிர்ப்பு தொழிநுட்பவியல் ஆய்வு மையம் மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கடல்சார் அனர்த்த தவிர்ப்பு தொடர்பாக மீனவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் கூட்ட மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. தொழிநுட்ப பீடத்தின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி எம்.ஜீ. எம். தாரிகின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அனர்த்த…

Read More

ஹக்கீமின் விருந்துபசாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட மு.கா MP க்கள்..!

இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை கெளரவிக்கும் முகமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன நிகழ்வு செவ்வாய்க்கிழமை (07) வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிக துணைத் தூதுவர், ஈழமக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்…

Read More

பாராளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்..!

நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான அச்சுறுத்தல் சம்பவம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழுவொன்றை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நியமித்துள்ளார்.  சற்றுமுன்னர் சபாநாயகர் இதனை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையிலான இந்த குழுவில் அமைச்சர்கள் சமல் ராஜபக்ச , பந்துல குணவர்தன , வாசுதேவ நாணயக்கார , இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ,எம் பிக்களான .கயந்த கருணாதிலக்க , ரவூப் ஹக்கீம் , விஜித்த ஹேரத்…

Read More

நிதியமைச்சர் இன்றி வரவு செலவுத்திட்ட விவாதம்-ரணில்..!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக நிதி அமைச்சரின் பங்கேற்பின்றி விவாதம் நடத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07) பாராளுமன்றத்தில் வினவினார். வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த நிதி பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதம் நடத்தாமல் ஏன் இந்தியா சென்றார் என சமுர்த்தி, உள்நாட்டு பொருளாதாரம், நுண் நிதி, சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம்…

Read More