
இந்தியாவின் ஆசைக்காக வடக்கு- கிழக்கு முஸ்லிங்களை பலிகொடுக்க தயாராகிறார் ஹக்கீம் : கிழக்கு மக்கள் விழித்தெழுந்து குரலெழுப்ப வேண்டும் – ஐக்கிய காங்கிரஸ்..!
நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண மக்கள் மீது அடிமைச்சாசனமாக எழுதப்பட்ட 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்தக்கோரும் நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துணைபோவது முஸ்லிம் சமூகத்துக்கும் நாட்டின் இறைமைக்கும் செய்யும் துரோகமாகும். இத்துரோகத்துக்கெதிராக கிழக்கு மக்கள் விழித்தெழ வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலாபூசணம் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றி ஊடகங்களுக்கு அவர் தெரிவித்ததாவது, வடக்கு கிழக்கை இணைத்து முஸ்லிம்களை அடிமையாக்கிய 13வது திருத்தத்தை எதிர்த்தே முஸ்லிம்…